ஆறு பந்துக்கும் டைவ் அடிக்க நான் ரெடி!! சிலிர்க்கவைத்த கோலி

By karthikeyan VFirst Published Oct 26, 2018, 2:10 PM IST
Highlights

இந்திய அணியின் கேப்டன் கோலி மிகுந்த அர்ப்பணிப்பான வீரர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ள தகவல் அவரது உச்சகட்ட அர்ப்பணிப்பு உணர்வை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. 
 

இந்திய அணியின் கேப்டன் கோலி மிகுந்த அர்ப்பணிப்பான வீரர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ள தகவல் அவரது உச்சகட்ட அர்ப்பணிப்பு உணர்வை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. 

இந்திய அணியின் கேப்டன் கோலி சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர். ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்து கொண்டிருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் ரன்களை குவித்து வருவதால் ரன் மெஷின் என அழைக்கப்படும் கோலி,  சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். 

கோலியின் கேப்டன்சியின் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், அவரது பேட்டிங் மற்றும் அர்ப்பணிப்பின் மீது யாராலும் குறைசொல்ல முடியாது. தீராத வெற்றி வேட்கை கொண்டவர் கோலி. அணியை வெற்றி பெற வைப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார். 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளிலும் சதம் விளாசி அசத்தியுள்ளார். முதல் போட்டியில் 140 ரன்கள் குவித்த கோலி, இரண்டாவது போட்டியில் 157 ரன்களை குவித்தார். இதன்மூலம் பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை சச்சினை பின்னுக்கு தள்ளி கோலி படைத்தார். சச்சின், கங்குலி, பாண்டிங், டிராவிட், ஜெயசூரியா என பல ஜாம்பவான்களின் சாதனைகளை தகர்த்தெறிந்தார் கோலி. 

இந்நிலையில், பிசிசிஐ டிவிக்கு அளித்த பேட்டியில் பேசிய விராட் கோலி, நாட்டுக்காக ஆடுவது என்பது மிகப்பெரிய கௌரவம். நான் இந்திய அணிக்காக 10 ஆண்டுகளாக ஆடிவருகிறேன். எனினும் சர்வதேச போட்டிகளில் நாட்டுக்காக ஒவ்வொரு ரன்னையும் எடுக்க கடுமையாக உழைக்க வேண்டும். ஒரு ஓவரின் 6 பந்துகளிலும் டைவ் அடிக்க வேண்டிய தேவை ஏற்பட்டால், அணிக்காக அதையும் செய்வேன். ஏனென்றால் அது என் கடமை; அதற்காகத்தான் இந்திய அணியில் நான் ஆடுகிறேன் என்று கூறி கோலி சிலிர்க்கவைத்துள்ளார். 
 

click me!