லாரா, டிராவிட், பாண்டிங்கை எல்லாம் சர்வ சாதாரணமா முந்திய கோலி!!போகிறபோக்கில் கோலிக்கு இதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல

By karthikeyan VFirst Published Sep 3, 2018, 11:21 AM IST
Highlights

கோலி போட்டிக்கு போட்டி சாதனைகளை முறியடித்து புதிய சாதனைகளை படைப்பதோடு புதிய மைல்கற்களையும் எட்டிவருகிறார். 
 

கோலி போட்டிக்கு போட்டி சாதனைகளை முறியடித்து புதிய சாதனைகளை படைப்பதோடு புதிய மைல்கற்களையும் எட்டிவருகிறார். 

சமகால கிரிக்கெட்டில் உலகின் தலைசிறந்த வீரரான கோலி, சாதனைகளையும் சதங்களையும் குவித்து வருகிறார். ஒரு பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் பழைய சாதனைகளை முறியடித்து புதிய சாதனைகளை படைத்து வருகிறார். இது போட்டிக்கு போட்டி நடந்துவருகிறது. 

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியிலும் சாதனையை செய்ய தவறவில்லை கோலி. இந்த போட்டியில் இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி டெஸ்ட் தொடரை இங்கிலாந்திடம் இழந்தது. இந்த போட்டியிலும் இரண்டு இன்னிங்ஸிலும் கோலி சிறப்பாக ஆடினார். முதல் இன்னிங்ஸில் 46 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 58 ரன்களும் எடுத்தார். 

இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக 4000 எடுத்த முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார். மேலும் சர்வதேச அளவில் மிகக்குறைந்த இன்னிங்ஸ்களில் 4000 ரன்களை கடந்த கேப்டன் என்ற பெருமையையும் கோலி பெற்றுள்ளார்.

கோலி கேப்டனாக, 65 இன்னிங்ஸ்களில் 4000 டெஸ்ட் ரன்களை கடந்துள்ளார். கோலிக்கு அடுத்து, 71 இன்னிங்ஸ்களில் 4000 ரன்களை கடந்த பிரயன் லாரா இரண்டாவது இடத்திலும் 75 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டிய ரிக்கி பாண்டிங் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

அதேபோல, வெளிநாட்டில் நடக்கும் டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய கேப்டனும் கோலி தான். இங்கிலாந்துக்கு எதிரான இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள 4 டெஸ்ட் போட்டிகளில் 544 ரன்களை கோலி குவித்துள்ளார். இதுதான் வெளிநாட்டில் நடக்கும் டெஸ்ட் தொடரில் இந்திய கேப்டன் அடித்த அதிகபட்ச ஸ்கோர். 

கோலிக்கு அடுத்த இடத்தில் 496 ரன்களுடன் ராகுல் டிராவிட் உள்ளார். 2006ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் நடந்த டெஸ்ட் தொடரில் ராகுல் டிராவிட் 496 ரன்களை குவித்தார்.
 

click me!