
ஒரு ஆண்டில் அதிக சதங்கள் அடித்த கேப்டன் என்ற புதிய சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடந்துவருகிறது. போட்டியின் மூன்றாவது நாளான இன்று விராட் கோலி சதமடித்தார். நேற்று முரளி விஜயின் அவுட்டானதும் களமிறங்கிய கோலி, இறங்கியது முதலே அதிரடியாக ஆட ஆரம்பித்தார். அதிரடியாக ஆடிய கோலி, டெஸ்ட் போட்டியில் தனது 19வது சதத்தை பூர்த்தி செய்தார்.
இந்த சதம் கோலியின் சாதனை சதமாகவும் அமைந்தது. இந்த ஆண்டில் கோலி, அடிக்கும் 10வது சதம் இதுவாகும். இதன் மூலம் ஒரு ஆண்டில் அதிகமான சதங்கள் அடித்த கேப்டன் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக 9 சதங்களுடன் ரிக்கி பாண்டிங் முதலிடத்தில் இருந்தார்.
தற்போது ரிக்கி பாண்டிங்கின் சாதனையை கோலி முறியடித்துள்ளார். இன்று ஆடியதன் மூலம், தொடர்ச்சியாக 8 நாட்கள் ஆடி புஜாரா சாதனை படைத்துள்ளார்.
தொடர்ந்து சிறப்பாக ஆடிவரும் கோலி, இரட்டை சதத்தை நோக்கி ஆடிக்கொண்டிருக்கிறார். 493 ரன்கள் எடுத்துள்ள இந்திய அணி, இலங்கையைவிட 288 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.