விஜய் ஹஸாரே கோப்பை: தமிழகம் - குஜராத் இன்று மோதல்...

Asianet News Tamil  
Published : Feb 05, 2018, 12:05 PM ISTUpdated : Sep 19, 2018, 01:55 AM IST
விஜய் ஹஸாரே கோப்பை: தமிழகம் - குஜராத் இன்று மோதல்...

சுருக்கம்

Vijay Hazare Trophy Tamilnadu - Gujarat Today Confrontation

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழகம் தனது முதல் ஆட்டத்தில் குஜராத்தை இன்று எதிர்கொள்கிறது.

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில், ஆல்ரௌண்டர் விஜய் சங்கர் தலைமையிலான தமிழக அணியில் அனுபவம் வாய்ந்த சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின், பேட்ஸ்மேன் முரளி விஜய் ஆகியோர் இருப்பது பெரும் பலம்.

கடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளுக்கான தேசிய அணியில் அஸ்வின் தேர்வு செய்யப்படாததால் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்க்க அவர் சிறப்பாக விக்கெட்டுகளை சாய்ப்பார். எதிர்வரும் ஐபிஎல் போட்டியில் அவர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தகக்து.

அதேபோல, சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரான முரளி விஜய் சமீப காலங்களில் ஒருநாள் போட்டிகளில் கலந்து கொள்ளவில்லை. ஐபிஎல் ஆரம்பிக்கும் முன்பாக இந்த ஆட்டத்தில் அவர் தன்னை தயார்படுத்திக் கொள்வார்.

ரஞ்சி கோப்பை போட்டியில் நாக் ஔட் சுற்றுக்கு முன்னேறத் தவறிய தமிழகம், சையது முஷ்டாக் அலி போட்டியில் சூப்பர் லீக் சுற்றில் நீடிக்கத் தவறியது.

எனவே, போதிய திருத்தங்களுடன் இந்தப் போட்டியை தமிழகம் எதிர்கொள்ளும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Sanju Samson: பேட்டிங்கில் மட்டுமல்ல; கல்லா கட்டுவதிலும் 'சேட்டன்' கில்லாடி.. அசர வைக்கும் சஞ்சு சாம்சன் சொத்து மதிப்பு!
Yuzvendra Chahal : ரோட்ல இப்படித்தான் பண்ணுவீங்களா?" - சர்ச்சையில் சிக்கிய யுஸ்வேந்திர சாஹல்? வைரலாகும் வீடியோ!