இந்திய ஓபன் பாட்மிண்டன்: இறுதிச்சுற்றில் அதிர்ச்சித் தோல்வி கண்டார் பி.வி.சிந்து...

Asianet News Tamil  
Published : Feb 05, 2018, 11:54 AM ISTUpdated : Sep 19, 2018, 01:55 AM IST
இந்திய ஓபன் பாட்மிண்டன்: இறுதிச்சுற்றில் அதிர்ச்சித் தோல்வி கண்டார் பி.வி.சிந்து...

சுருக்கம்

Indian Open Badminton sindhu lost in finals

இந்திய ஓபன் பாட்மிண்டன் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

இந்திய ஓபன் பாட்மிண்டன் போட்டியின்  மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் நடப்புச் சாம்பியனான இந்தியாவின் சிந்து மற்றும் அமெரிக்காவின் பெய்வென் ஸாங்க் மோதினர்.

விறுவிறுப்பாக நடைப்பெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து, 18-21, 21-11, 20-22 என்ற செட்களில் பெய்வென் ஸாங்கிடம் தோல்வி கண்டார்.

இத்துடன் பெய்வென்னை 4 முறை சந்தித்துள்ள சிந்து, 2 வெற்றி, 2 தோல்விகளை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் சீனாவின் ஷி யுகி 21-18, 21-14 என்ற நேர் செட்களில்" தைவானின் சோவ் டியென் சென்னை வென்று சாம்பியன் ஆனார்.

கலப்பு இரட்டையர் பிரிவில் டென்மார்க்கின் மதியாஸ் கிறிஸ்டியான்சென் - கிறிஸ்டினா பெடர்சன் இணை, இந்தோனேஷியாவின் பிரவீண் ஜோர்டான் - மெலாடி டேவா ஆக்டாவியான்டி இணையை வென்று சாம்பியன் ஆனது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IPL 2026: சூடுபிடிக்கும் தேர்தல் களம்.. ஐபிஎல் 2026 தள்ளிப்போகிறதா? புதிய அட்டவணை என்ன?
IND vs WI: இந்திய அணி பிளேயிங் லெவனில் என்னென்ன மாற்றங்கள்? சஞ்சு சாம்சன் நீக்கமா? முழு அப்டேட்!