இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதல் - இது மகளிர் மட்டும்...

Asianet News Tamil  
Published : Feb 05, 2018, 11:50 AM ISTUpdated : Sep 19, 2018, 01:55 AM IST
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதல் - இது மகளிர் மட்டும்...

சுருக்கம்

India - South Africa Teams Today Confront - Women Only ...

மகளிர் கிரிக்கெட்டில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் ஆட்டம் திங்கள்கிழமை நடைபெறுகிறது.

மூன்று ஒருநாள், ஐந்து டி20 ஆட்டங்களைக் கொண்ட கிரிக்கெட் தொடரில் கலந்து கொள்வதற்காக இந்திய மகளிர் அணி தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளது.

2017 உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டம் வரையில் முன்னேறிய இந்திய அணி, 7 மாத இளைப்பாறலுக்குப் பிறகு தற்போது களம் காண்கிறது.

மிதாலி ராஜ் தலைமையிலான இந்த அணிக்கு, ஹர்மன்பிரீத் கெளர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

விக்கெட் கீப்பர் டானியா பாட்டியா, எக்தா பிஷ்த், ராஜேஷ்வரி கெய்க்வாட், ஜுலன் கோஸ்வாமி, வேதா கிருஷ்ணமூர்த்தி, ஸ்மிருதி மந்தனா, மோனா மேஷ்ராம், சிக்ஷா பாண்டே, பூனம் ராவத், ஜெமிமா ரோட்ரிகஸ், தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ரகர், சுஷ்மா வர்மா, பூனம் யாதவ் ஆகியோர் அணியில் உள்ளனர்.

இந்த ஒருநாள் தொடரில் வெற்றி பெறுவதன் மூலமாக, 2021-ஆம் ஆண்டு ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பு இரு அணிகளுக்கும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Sanju Samson: பேட்டிங்கில் மட்டுமல்ல; கல்லா கட்டுவதிலும் 'சேட்டன்' கில்லாடி.. அசர வைக்கும் சஞ்சு சாம்சன் சொத்து மதிப்பு!
Yuzvendra Chahal : ரோட்ல இப்படித்தான் பண்ணுவீங்களா?" - சர்ச்சையில் சிக்கிய யுஸ்வேந்திர சாஹல்? வைரலாகும் வீடியோ!