முதல் பந்தில் வயிற்றில் அடி.. அடுத்த பந்தில் சிக்ஸர்!! கெத்து காட்டிய கேப்டன் கோலி

Asianet News Tamil  
Published : Feb 04, 2018, 05:04 PM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
முதல் பந்தில் வயிற்றில் அடி.. அடுத்த பந்தில் சிக்ஸர்!! கெத்து காட்டிய கேப்டன் கோலி

சுருக்கம்

kohli lashed sixer after attacked by rabada

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 119 என்ற எளிய இலக்கை இந்திய அணி விரட்டி வருகிறது.

முதல் ஒருநாள் போட்டியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற உத்வேகத்துடன் இந்திய அணி, செஞ்சூரியன் போட்டியில் களம் கண்டது.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்தது. சாஹலின் சுழலை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்க அணி, 118 ரன்களுக்கே ஆல் அவுட்டானது.

இதையடுத்து 119 என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்கம் முதலே அதிரடியாக ஆட ஆரம்பித்தார் ரோஹித் சர்மா. சிக்ஸர், பவுண்டர்கள் என பறக்கவிட்ட ரோஹித், 15 ரன்களில் ரபாடா பந்தில் அவுட்டானார்.

பிறகு கேப்டன் கோலியும் தவானும் ஜோடி சேர்ந்தனர். 8வது ஓவரில் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடந்தது. 

8வது ஓவரை ரபாடா வீசினார். அந்த ஓவரின் 5வது பந்தை கோலி அடிக்க தவறினார். அதனால் அந்த பந்து கோலியின் வயிற்றை பதம் பார்த்தது. பந்து வயிற்றில் அடித்ததால் கோலி, வலியால் துடித்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அடுத்த பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டார் கோலி.

வயிற்றில் அடி வாங்கியதற்கு அடுத்த பந்தை கோலி சிக்ஸர் அடித்ததும் ரசிகர்கள் ஆர்ப்பரித்தணர். 
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IPL 2026: சூடுபிடிக்கும் தேர்தல் களம்.. ஐபிஎல் 2026 தள்ளிப்போகிறதா? புதிய அட்டவணை என்ன?
IND vs WI: இந்திய அணி பிளேயிங் லெவனில் என்னென்ன மாற்றங்கள்? சஞ்சு சாம்சன் நீக்கமா? முழு அப்டேட்!