51-1... 51-4... இந்தியாவின் மிரட்டல் பவுலிங்கில் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து திணறும் தென்னாப்பிரிக்கா!!

Asianet News Tamil  
Published : Feb 04, 2018, 02:57 PM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
51-1... 51-4... இந்தியாவின் மிரட்டல் பவுலிங்கில் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து திணறும் தென்னாப்பிரிக்கா!!

சுருக்கம்

south africa losing wickets frequently

முதலில் பேட்டிங் செய்துவரும் தென்னாப்பிரிக்க அணி, இந்திய பவுலிங்கை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறிவருகிறது.

இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களாக குயிண்டன் டி காக் மற்றும் ஹாசிம் ஆம்லா ஆகியோர் களமிறங்கினர்.

தொடக்கத்தில் புவனேஷ்வர் குமாரும் பும்ராவும் சிறப்பாக பந்துவீசினர். இருவரின் வேகத்தையும் எதிர்கொள்ள முடியாமல் ஆம்லாவும் டி காக்கும் திணறினர். பின்னர் பாண்டியாவின் பந்துகளில் ஒருசில பவுண்டரிகள் அடித்தனர்.

ஆனாலும் அவர்களின் ஆட்டம் நீடிக்கவில்லை. புவனேஷ்வர் குமாரின் பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து முதல் ஆளாக வெளியேறினார். அவர் அவுட்டாகும்போது தென்னாப்பிரிக்காவின் ஸ்கோர் 39.

தென்னாப்பிரிக்கா,  51 ரன்கள் எடுத்திருந்தபோது சாஹலின் சுழலில் டி காக் அவுட்டானார். 

அதற்கு அடுத்த ஓவரிலேயே குல்தீப் யாதவின் சுழலில் மார்க்ரம் மற்றும் மில்லர் ஆகிய இருவரும் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். 51 ரன்னிலேயே 3 விக்கெட்டுகளை தென்னாப்பிரிக்கா இழந்தது.

15 ஓவருக்கு உள்ளாகவே 4 விக்கெட்டுகளை இழந்து தென்னாப்பிரிக்க அணி திணறிவருகிறது. தற்போது ஜோண்டோ மற்றும் டுமினி ஆகியோர் களத்தில் ஆடிவருகின்றனர்.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Vaibhav Suryavanshi: கெயில் ரெக்கார்டுக்கு ஆப்பு? ஐபிஎல்-ஐ மிரட்டும் 15 வயது ‘சின்ன’ புயல் வைபவ்..!
Sanju Samson: பேட்டிங்கில் மட்டுமல்ல; கல்லா கட்டுவதிலும் 'சேட்டன்' கில்லாடி.. அசர வைக்கும் சஞ்சு சாம்சன் சொத்து மதிப்பு!