சாஹலின் சுழலில் சுருண்டது தென்னாப்பிரிக்கா!! 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மாஸ் காட்டிய சாஹல்

Asianet News Tamil  
Published : Feb 04, 2018, 04:07 PM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
சாஹலின் சுழலில் சுருண்டது தென்னாப்பிரிக்கா!! 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மாஸ் காட்டிய சாஹல்

சுருக்கம்

chahal rolled out south africa for just hundred and eighteen runs

இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெறும் 118 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களாக குயிண்டன் டி காக் மற்றும் ஹாசிம் ஆம்லா ஆகியோர் களமிறங்கினர்.

தொடக்கத்தில் புவனேஷ்வர் குமாரும் பும்ராவும் சிறப்பாக பந்துவீசினர். இருவரின் வேகத்தையும் எதிர்கொள்ள முடியாமல் ஆம்லாவும் டி காக்கும் திணறினர். பின்னர் பாண்டியாவின் பந்துகளில் ஒருசில பவுண்டரிகள் அடித்தனர்.

ஆனாலும் அவர்களின் ஆட்டம் நீடிக்கவில்லை. புவனேஷ்வர் குமாரின் பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து முதல் ஆளாக வெளியேறினார். அவர் அவுட்டாகும்போது தென்னாப்பிரிக்காவின் ஸ்கோர் 39.

தென்னாப்பிரிக்கா,  51 ரன்கள் எடுத்திருந்தபோது சாஹலின் சுழலில் டி காக் அவுட்டானார். 

அதற்கு அடுத்த ஓவரிலேயே குல்தீப் யாதவின் சுழலில் மார்க்ரம் மற்றும் மில்லர் ஆகிய இருவரும் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். 51 ரன்னிலேயே 3 விக்கெட்டுகளை தென்னாப்பிரிக்கா இழந்தது.

அதன்பிறகு ஜாண்டோவும் டுமினியும் சிறிது நேரம் ஆடினர். ஆனால் அந்த இணையும் நீடிக்கவில்லை. ஜாண்டோ, டுமினி, ரபாடா, மோர்கல் என அனைவரும் அடுத்தடுத்து பெவிலியனுக்கு நடையை கட்ட அந்த அணி, 32.2 ஓவர்கள் முடிவில் 118 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்திய அணியின் சார்பில் சாஹல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

119 என்ற எளிய இலக்குடன் இந்திய அணி ஆடி வருகிறது.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IPL 2026: சூடுபிடிக்கும் தேர்தல் களம்.. ஐபிஎல் 2026 தள்ளிப்போகிறதா? புதிய அட்டவணை என்ன?
IND vs WI: இந்திய அணி பிளேயிங் லெவனில் என்னென்ன மாற்றங்கள்? சஞ்சு சாம்சன் நீக்கமா? முழு அப்டேட்!