விஜய் ஹஸாரே கோப்பை: தமிழகம் தொடர்ந்து 3-வது முறையாக தோல்வி...

 
Published : Feb 10, 2018, 12:45 PM ISTUpdated : Sep 19, 2018, 01:56 AM IST
விஜய் ஹஸாரே கோப்பை:  தமிழகம் தொடர்ந்து 3-வது முறையாக தோல்வி...

சுருக்கம்

Vijay Hazare Cup Tamil Nadu continues to fail for 3rd time ...

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழகம் தொடர்ந்து 3-வது முறையாக தோல்வி அடைந்துள்ளது.

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் 4-வது ஆட்டத்தில் மத்திய பிரதேசத்திடம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்ந்த தமிழகம் இந்தப் போட்டியில் தொடர்ந்து முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டி சென்னையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற மத்திய பிரதேசம் முதலில் பந்துவீச தீர்மானித்தது.

முதலில் பேட் செய்த தமிழகம் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 302 ஓட்டங்கள் எடுத்தது.  அடுத்து ஆடிய மத்திய பிரதேசம் 46 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 303 ஓட்டங்கள் எடுத்து வென்றது.

பேட் செய்த தமிழகத்தில் ஜெகதீசன் 99 ஓட்டங்கள் அடித்தார்.

மத்திய பிரதேசத்தில் அங்கித் குஷ்வா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய மத்திய பிரதேசத்தில் ரஜத் படிதார் 158 ஓட்டங்கள் விளாசினார்.

தமிழக தரப்பில் ரஹீல் ஷா, அஸ்வின் கிறிஸ்ட் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

இந்த தோல்வியின் மூலம் போட்டியில் தொடர்ந்து முன்னேறும் வாய்ப்பை இழந்தது தமிழகம்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஓவராக குடித்து மட்டையான இங்கிலாந்து வீரர்கள்! ஆஷஸ் தோல்விக்கு காரணம் இப்பதான் புரியுது!
20 வயதில் டி20 உலகக்கோப்பை வெற்றி; அதுவே தொடர் வெற்றிக்கு நம்பிக்கை தந்தது: ரோஹித் சர்மா