Vaishali Rameshbabu : இந்தியாவின் கோனேரு ஹம்பி மற்றும் ஹரிகா துரோணவல்லிக்கு பிறகு வைஷாலி ரமேஷ் பாபு தான இப்போது இந்தியாவின் மூன்றாவது பெண் கிராண்ட்மாஸ்டர் ஆவார்.
வைஷாலி ரமேஷ்பாபு சனிக்கிழமை அன்று நடைபெற்ற 2023ம் ஆண்டுக்கான IV எல்லோபிரேகாட் ஓபன் போட்டியின்போது 2500 என்ற மதிப்பீட்டைத் தாண்டி, இந்தியாவின் 84வது கிராண்ட்மாஸ்டர் ஆனார். கோனேரு ஹம்பி மற்றும் ஹரிகா துரோணவல்லிக்கு பிறகு வைஷாலி இப்போது இந்தியாவின் மூன்றாவது பெண் கிராண்ட்மாஸ்டர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
வைஷாலி ரமேஷ்பாபு, பிரபல செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவின் மூத்த சகோதரி ஆவார். இப்போது கிராண்ட்மாஸ்டர்களாக இருக்கும் முதல் உடன்பிறந்த சகோதர, சகோதரிகளாக மாறியுள்ளார்கள் இவர்கள். வைஷாலி தனது இரண்டாவது சுற்றில் துருக்கிய நாட்டை சேர்ந்த FM Tamer Tarik Selbes (2238 புள்ளிகள்) என்பவர் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 4000 ரன்களை கடந்து ருதுராஜ் கெய்க்வாட் சாதனை!
22 வயதான வைஷாலிக்கு மூன்று GM விதிமுறைகள் இருந்தன, Xtracon Open 2019, Fischer Memorial 2022 மற்றும் Qatar Open 2023. மேலும் 2500 என்ற கிராண்ட் மாஸ்டர் அளவை தாண்டுவதற்கு 4.5 மதிப்பீடுகள் மட்டுமே தேவைப்பட்டன. அவர் இப்போது 2501.5 நேரடி மதிப்பீட்டில் பெண்கள் தரவரிசையில் தற்போதைய உலகின் 11வது இடத்திலும், இந்தியாவின் இரண்டாவது இடத்திலும் உள்ளார்.
வைஷாலிக்கு இந்த 2023ம் ஆண்டில் இறுதி ஒரு மறக்க முடியாத ஆண்டாக மாறியுள்ளது என்றே கூறலாம். இந்த மறக்கமுடியாத ஆண்டில், வைஷாலி FIDE மகளிர் கிராண்ட் ஸ்விஸ் 2023ஐ வென்றார் மற்றும் 2024ம் ஆண்டிற்கான போட்டிகளுக்கு அவர் தகுதி பெற்றுள்ளார்.