
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நிலை வீரரான ஸ்பெயின் கார்லோஸ் அல்கரஸ், 3-ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவுடன் மோதினார்.
இந்த போட்டியில் டேனியல் மேத்வதேவ் 7-6 (7-3), 6-1, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் அல்கரஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.மற்றொரு அரை இறுதியில் 2-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 47-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பென் ஷெல்டனுடன் மோதினார். அமெரிக்க ஓபன் தொடர்களில் ஜோகோவிச்சுக்கு இது 100-வது ஆட்டமாக அமைந்திருந்தது.
இதில் எளிதாக வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் நுழைந்தார். 3 முறை சாம்பியனான ஜோகோவிச் இறுதிப் போட்டியில் கால்பதிப்பது இது 10-வது முறை. 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்று குவித்துள்ள ஜோகோவிச், இந்த முறை வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது.
இந்திய நேரப்படி இன்று அதிகாலை 1.40 மணி அளவில் இந்தப் போட்டி தொடங்கியது. சுமார் 3 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு மேல் இந்தப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் 6-3, 7-6(5), 6-3 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கினார்.
“அன்னைக்கே சொன்னேன்.. மாரிமுத்து செஞ்ச ஒரே தப்பு இதுதான்” ஜோதிடர் கிளப்பிய சர்ச்சை.. பரபரப்பு பேட்டி
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.