பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் அமெரிக்கா 30 தங்கம், 38 வெள்ளி மற்றும் 35 வெண்கலப் பதக்கத்துடன் பதக்கப் பட்டியலில் நம்பர் 1 இடத்திலும், சீனா 74 பதக்கங்களுடன் 2ஆவது இடத்திலும் உள்ளன.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33ஆவது ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா சார்பில் போட்டியிட்ட 117 விளையாட்டு வீரர்களில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங், ஸ்வப்னில் குசலே, ஹாக்கி இந்தியா மற்றும் நீரஜ் சோப்ரா ஆகியோர் பதக்கம் வென்று கொடுத்துள்ளனர். இதில், 4 வெண்கலப் பதக்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் என்று இந்தியா 5 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 63ஆவது இடத்தில் உள்ளது.
இந்தியாவிற்கு வெள்ளி பதக்கம் வென்று கொடுத்த நீரஜ் சோப்ராவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
undefined
இந்த நிலையில் தான் அமெரிக்கா 30 தங்கம், 38 வெள்ளி மற்றும் 35 வெண்கலப் பதக்கம் என்று மொத்தமாக 103 பதக்கம் வென்று பதக்கப்பட்டியலில் நம்பர் 1 இடத்தில் உள்ளது. கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் அமெரிக்கா 39 தங்கம், 41 வெள்ளி மற்றும் 33 வெண்கலப் பதக்கம் என்று மொத்தமாக 113 பதக்கங்கள் வென்று பதக்கப் பட்டியலில் நம்பர் 1 இடத்தில் இருந்தது.
இதே போன்று சீனா 30 தங்கம், 25 வெள்ளி மற்றும் 19 வெண்கலப் பதக்கம் என்று மொத்தமாக 74 பதக்கங்கள் வென்று பதக்கப் பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் 38 தங்கம், 32 வெள்ளி மற்றும் 19 வெண்கலப் பதக்கம் என்று மொத்தமாக 89 பதக்கங்கள் கைப்பற்றி 2ஆவது இடத்தில் இருந்தது. மேலும், ஆஸ்திரேலியா 18 தங்கம், 14 வெள்ளி மற்றும் 14 வெண்கலப் பதக்கம் என்று மொத்தமாக 46 பதக்கங்கள் வென்று பதக்கப்பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் கடந்த டோக்கியோ ஒலிம்பிக் தொடரை விட ஒவ்வொரு நாடுகளும் குறைவான எண்ணிக்கையில் பதக்கங்களை வென்றுள்ளன. இதற்கு காரணம் அங்குள்ள வெப்பநிலையும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. அதோடு, பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இடம் பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு போதுமான வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. இந்தியா தங்களது வீரர், வீராங்கனைகளுக்கு உதவும் வகையில் 40 குளிர்சாதனங்களை வழங்கிய குறிப்பிடத்தக்கது.
ஹாக்கி போட்டியிலிருந்து ஓய்வு அறிவித்த பிஆர் ஸ்ரீஜேஷ்: யார் இந்த ஸ்ரீஜேஷ்? சாதனைகள் என்ன?
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கம் என்று மொத்தமாக 7 பதக்கங்களை கைப்பற்றி பதக்கப் பட்டியலில் 46ஆவது இடத்தில் இருந்தது. இந்த பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியா இதுவரையில் ஒரு தங்கப் பதக்கம் கூட கைப்பற்றவில்லை. நீரஜ் சோப்ரா மட்டுமே இந்தியாவிற்கு ஒரு வெள்ளிப் பதக்கம் வென்று கொடுத்துள்ளார். அதோடு 4 வெண்கலப் பதக்கும் கைப்பற்றியிருக்கிறது. கடந்த 1900 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் இந்தியா மொத்தமாக 40 பதக்கங்களை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பாரிஸ் ஒலிம்பிக் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக இந்தியா 35 பதக்கங்களை கைப்பற்றியிருந்தது.