இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம் வென்று கொடுத்த நீரஜ் சோப்ராவின் நிகர சொத்து மதிப்பு ரூ.37 கோடி ஆகும்.
பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியா சார்பில் போட்டியிட்ட நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்று கொடுத்தார். இதன் மூலமாக இந்தியா 4 வெண்கலம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் என்று மொத்தமாக 5 பதக்கங்களை கைப்பற்றி பதக்கப் பட்டியலில் 64 ஆவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் தான் இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம் வென்று கொடுத்த நீரஜ் சோப்ராவின் சொத்து மதிப்பு ரூ.37 கோடி ஆகும்.
undefined
நீரஜ் சோப்ரா பல முன்னணி பிராண்டு நிறுவனங்களான Nike, Gatorade, Tata AIA Life Insurance மற்றும் CRED ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். அவரது இந்த ஒப்பந்தங்கள் வருமானத்தில் பெரும் பங்களிப்பை அளிக்கின்றன. நீரஜ் சோப்ரா பல கோடி மதிப்பிலான சொத்துக்களை வைத்துள்ளார். இது அவரது ஒட்டுமொத்த நிகர மதிப்பை அதிகரிக்கச் செய்கிறது. இதுதவிர ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட், ஃபோர்டு மஸ்டாங் ஜிடி, டொயோட்ட ஃபார்ச்சூனர், மஹீந்திரா தார் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 700 போன்ற கார்களை வைத்திருக்கிறார். ஹார்ட்லி டேவிட்சன் 1200 ரோட்ஸ்டர் மற்றும் பஜாஜ் பல்சர் 220எஃப் போன்ற பைக்குகளையும் வைத்திருக்கிறார்.
ஹாக்கி போட்டியிலிருந்து ஓய்வு அறிவித்த பிஆர் ஸ்ரீஜேஷ்: யார் இந்த ஸ்ரீஜேஷ்? சாதனைகள் என்ன?
நீரஜ் சோப்ராவின் வருமானத்தில் ஒலிம்பிக் வெற்றிகளை தொடர்ந்து மாநில அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்பட பல ஆதாரங்களிலிருந்து வெகுமதியைப் பெற்றுள்ளது.