பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம் வென்று கொடுத்த நீரஜ் சோப்ராவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸீல் 33ஆவது ஒலிம்பிக் தொடரானது பரபரப்பான கட்டத்தை நெருங்கிவிட்டது. இன்னும், ஓரிரு நாட்களில் பாரிஸ் 2024 ஒலிம்பிக் நிறைவு விழா நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் 3 வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றியிருந்த இந்தியா, ஹாக்கி போட்டியில் வெற்றி பெற்று 4ஆவது வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றி இந்தியாவிற்கு பெருமை சேர்த்தது.
ஜூனியர் ஆண்கள் ஹாக்கி அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக பிஆர் ஸ்ரீஜேஷ் நியமனம்!
இந்த நிலையில் தான் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் வென்று கொடுத்த நீரஜ் சோப்ரா ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம் வென்று கொடுத்துள்ளார். இதன் மூலமாக இந்தியா 4 வெண்கலப் பதக்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கம் உள்பட மொத்தமாக 5 பதக்கங்களை கைப்பற்றியது. இந்த நிலையில் நீரஜ் சோப்ராவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, அவருடன் சில நேரம் உரையாடியுள்ளார். மேலும், காயம் குறித்து ஒலிம்பிக்ஸ் அனுபவம் குறித்தும் பேசியுள்ளார்.
ஹாக்கி போட்டியிலிருந்து ஓய்வு அறிவித்த பிஆர் ஸ்ரீஜேஷ்: யார் இந்த ஸ்ரீஜேஷ்? சாதனைகள் என்ன?
ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவிடக்ம் பிரதமர் மோடி பேசினார். அவரது காயம் குறித்து கேட்டறிந்த மோடி, அவரது தாயார் காட்டிய உத்வேகத்தையும் பாராட்டினார். pic.twitter.com/rRcFr5HY01
— Asianetnews Tamil (@AsianetNewsTM)