நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கணும் - அனுராக் தாக்குருக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…

Asianet News Tamil  
Published : Jul 08, 2017, 09:53 AM ISTUpdated : Sep 19, 2018, 12:51 AM IST
நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கணும் - அனுராக் தாக்குருக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…

சுருக்கம்

Unconditional apology Supreme Court order for Anurak tagoor

பிசிசிஐ முன்னாள் தலைவரான அனுராக் தாக்குர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக விசாரணையை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு மேற்கொண்டது.

இந்த வழக்கில் அனுராக் தாக்குர் மன்னிப்பு கோரி முன்னதாக சமர்ப்பித்த பிரமாணப் பத்திரத்தை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்தது.

மேலும், அனுராக் தாக்குர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரும் வகையில் ஒரு பக்க அளவிலான சுருக்கமான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அத்துடன், அனுராக் தாக்குர் அவ்வாறு மன்னிப்பு கோரும் பட்சத்தில் அதனை ஏற்று, அவருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்துக்கொள்ள தயாராக இருப்பதாகவும் நீதிமன்ற அமர்வு தெரிவித்தது.

பின்னர், இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணையை வரும் 14-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்த உச்ச நீதிமன்றம், அன்றைய தினம் அனுராக் தாக்குர் நேரில் ஆஜராக உத்தரவிட்டது.

இதனிடையே, விசாரணையின்போது அனுராக் தாக்குர் தரப்பில் ஆஜரான அவரது வழக்கறிஞர் பி.எஸ்.பட்வாலியா, 'அனுராக் தாக்குர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர தயாராக உள்ளபோதிலும், அவர் தவறு செய்யவில்லை என்பதை நிரூபிப்பதற்கான முகாந்திரம் உள்ளது' என்று நீதிமன்ற அமர்விடம் தெரிவித்தார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

MS Dhoni Fear: கேப்டன் கூல்-க்கு இவ்வளவு பயமா? - ஊசி என்றாலே தெறித்து ஓடும் தோனி..
மொடா குடி வார்னர்..! மூச்சுமுட்ட குடித்துவிட்டு போலீசிடம் வசமாக சிக்கிய டேவிட் வார்னர்..