umran malik ip : சாதனையாளர் வரிசையில் உம்ரான் மாலிக்: ஜெஸ்ட்கார்டு இல்லாட்டி நெஞ்சு பிளந்திரும்: பிலிப்ஸ் பீதி

By Pothy RajFirst Published Apr 18, 2022, 11:07 AM IST
Highlights

umran malik ipl : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
உம்ரான் மாலிக் பந்துவீச்சை வலைப்பயிற்சில் எதிர்கொள்ளும்போது ஜெஸ்ட் கார்டு இல்லாவிட்டால் நெஞ்சு பிளந்துவிடும் என்று கிளென் பிலிப்ஸ் தெரிவித்துள்ளார்.

மும்பையி்ல் நேற்று நடந்த ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. முதலில் பேட்செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 151 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 152 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி, 18.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. புள்ளிப்பட்டியலிலும் 4-வது இடத்துக்கு முன்னேறியது. ஐபிஎல் சீசனில் தொடர்ந்து 4 வெற்றிகளைப் பெற்ற முதல் அணியாக சன்ரைசர்ஸ் மாறியுள்ளது.

இந்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் காலிக் அற்புதமாகப் பந்துவீசி 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 28 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் 3 விக்கெட்டுகளுமே கடைசி ஓவரில் கிடைத்தவையாகும். ஹாட்ரிக் எடுக்க வேண்டிய வாய்ப்பை உம்ரான் தகவறவிட்டார், 4-வது பந்தில் ராகுல் சஹரும், 5-வது பந்தில் அரோராவும் ஆட்டமிழந்தனர். கடைசிப் பந்தில் அர்ஷ்தீப்சிங் ரன் அவுட் செய்யப்பட்டார். முதல் பந்தில் ஒடியன் ஸ்மித்ஆட்டமிழந்தார்

கடைசி ஓவரை வீசிய உம்ரான் மாலிக்ஒரு ரன்கூட கொடுக்காமல் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, ஒரு ரன்அவுட்டும் நிகழ்த்தப்பட்டது. இதன் மூலம் ஐபிஎல் டி20 தொடரில் கடைசி ஓவரில் ஒரு ரன்கூட கொடுக்காமல் பந்துவீசிய  பந்துவீச்சாளர்களில் லசித் மலிங்கா, இர்பான் பதான், ஜெயதேவ் உனத்கத் ஆகியோர் வரிசையில் உம்ரான் மாலிக்கும் இணைந்தார்.

இதற்கிடையே ஆஸி. வீரர் கிளென் பிலிப்ஸ், உம்ரான் மாலிக் பந்துவீச்சு குறித்து பெருமையாகப் பேசியுள்ளார். அவர் கூறுகையில் “ வலைப்பயிற்சியின்போது, உம்ரான் மாலிக் பந்துவீச்சை எதிர்கொள்வது எளிதானது அல்ல. உடம்பில் ஜெஸ்ட் கார்டு இல்லாமல் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாது.  பந்துவீச்சின்போது எவ்வாறு சோர்வில்லாமல் பந்துவீசுகிறார், அவரின் பந்துவீச்சை எவ்வாறு எதிர்கொள்வது என வியந்திருக்கிறேன். உம்ரான் பந்துவீசும்போது,  தேர்டுமேன் பகுதியில் 2 பீல்டர்களை நிறுத்துவதே வித்தியாசமானதாக இருக்கும். 

ஏனென்றால், உம்ரான் மாலிக் பந்துவீச்சில் ஸ்லிப் நிறுத்துவது வீணானது, அவரின் வேகமான பந்துவீச்சை பேட்ஸ்மேன் தொட்டாலே அது தேர்டு மேன் திசையை நோக்கித்தான் செல்லும். ஆதலால் ஸ்லிப் வைப்பதைவிட தேர்டுமேன் திசையில் இரு பீல்டர்களை கேன் வில்லியம்ஸன் நிறுத்துவது சிறப்பு” எனத் தெரிவித்தார்

click me!