
பதினேழு வயதுக்கு உள்பட்டோருக்கான யு-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மாலி அணியும், பராகுவே அணியும் அடுத்த சுற்றுக்கு முன்னேறின.
பதினேழு வயதுக்கு உள்பட்டோருக்கான யு-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டி டெல்லியில் நேற்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் அபாரமாக ஆடிய மாலி அணி 18-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது. இந்த கோலை சாலம் ஜிடோவ் அடித்தார். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் மாலி அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 50-வது நிமிடத்தில் ஜெமூசா கோலடிக்க, மாலி அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது.
மறுமுனையில் போராடிய நியூஸிலாந்து அணி 72-வது நிமிடத்தில் சார்லஸ் மூலம் கோலடித்தது. அதற்குப் பதிலடியாக 82-வது நிமிடத்தில் மாலி வீரர் லஸானா டியே கோலடித்தார்.
இறுதியில் மாலி அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்றது.
அதேபோன்று, நவி மும்பையில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் பராகுவே அணி 3-1 என்ற கோல் கணக்கில் துருக்கியை வீழ்த்தியது.
பராகுவே தரப்பில் ஜியோவானி 41-வது நிமிடத்திலும், பெர்னாண்டோ கார்டோஸா 43-வது நிமிடத்திலும், கேல்யானோ 61-வது நிமிடத்திலும் கோலடித்தனர்.
மறுமுனையில் திணறிய துருக்கி அணி, "இஞ்சுரி' நேரத்தில் கோலடித்தது. இந்த கோலை கெரீம் அடித்தார்.
துருக்கியை வீழ்த்தியதன் மூலம் 3-வது வெற்றியைப் பெற்ற பராகுவே அணி 9 புள்ளிகளுடன் "பி' பிரிவில் முதலிடத்தைப் பிடித்தது.
இதே பிரிவில் மாலி அணி 6 புள்ளிகளுடன் 2-வது இடத்தைப் பிடித்தது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.