
பதினேழு வயதுக்கு உள்பட்டோருக்கான யு-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கொலம்பியாவுக்கு மரண அடி கொடுத்து வீழ்த்தி ஜெர்மனி அணி காலிறுதிக்கு முன்னேறி அசத்தியது.
பதினேழு வயதுக்கு உள்பட்டோருக்கான யு-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டி டெல்லியில் நேற்று நடைபெற்றது.
இதன் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜெர்மனி 4-0 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தியது இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஜெர்மனி ஆதிக்கம் செலுத்தியதால் கொலம்பிய வீரர்கள் திணறினர். அவர்களால் பந்தை தங்களின் கட்டுப்பாட்டில் வைப்பதே இயலாத காரியமானது.
தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்ட ஜெர்மனியின் கேப்டனும், நட்சத்திர ஸ்டிரைக்கருமான ஜான் ஃபியேட் ஆர்ப் 7-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார்.
அதனைத் தொடர்ந்து ஆக்ரோஷமாக ஆடிய ஜெர்மனி 39-வது நிமிடத்தில் 2-வது கோலை அடித்தது. இந்த கோலை யான் பிசெக் அடித்தார்.
இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் ஜெர்மனி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
பின்னர் நடைப்பெற்ற 2-வது பாதி ஆட்டத்திலும் ஜெர்மனியின் ஆதிக்கமே தொடர்ந்தது. 49-வது நிமிடத்தில் ஜான் இபோ கோலடிக்க, ஜெர்மனி 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
அதைத் தொடர்ந்து 65-வது நிமிடத்தில் ஆர்ப் தனது 2-வது கோலை அடித்தார். ஒட்டுமொத்தமாக இந்தத் தொடரில் அவர் அடித்த 4-வது கோல் இது.
மறுமுனையில் கொலம்பியா அணி போராடி கடைசி வரை பலன் கிடைக்காமல் தோற்றது. இதனால் ஜெர்மனி 4-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி கண்டது.
ஜெர்மனி தனது காலிறுதியில் பிரேசில் அல்லது ஹோண்டுராஸை சந்திக்கவுள்ளது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.