ஆசியக் கோப்பை ஹாக்கியில் இந்தியா அபாரம்…. பாகிஸ்தானை தூக்கிப்போட்டு துவம்சம் செய்தது!

Asianet News Tamil  
Published : Oct 16, 2017, 09:54 AM ISTUpdated : Sep 19, 2018, 01:18 AM IST
ஆசியக் கோப்பை ஹாக்கியில் இந்தியா அபாரம்…. பாகிஸ்தானை தூக்கிப்போட்டு துவம்சம் செய்தது!

சுருக்கம்

Hockey India Pakistan qualify for round robin of Asia Cup

வங்காளதேசத்தில் நடந்து வரும் ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டியின் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்திய அணி.

ஆசியக் கோப்பை ஹாக்கிபோட்டி வங்காளதேசம் தலைநகர் டாக்காவில் நடந்து வருகிறது. இதில் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்திய அணி ஏற்கனவே தனது 2 லீக் ஆட்டங்களில் வென்று 6 புள்ளிகளுடன் உள்ளது. இந்நிலையில், இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை இன்று எதிர்கொண்டது.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இந்திய அணியின் ஆதிக்கம் இருந்து வந்தது. அதற்கேற்றார்போல் ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் இந்திய வீரர் சிங்கலேசனா சிங் முதல் கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார். அதன்பின் 2 கால்பகுதி ஆட்டங்களிலும் இருஅணிகளும் கோல் அடிக்கவில்லை.

நான்காவது கால்பகுதி ஆட்டத்தில் இரு அணியினரும் ஆக்ரோஷமாக மோதினர். 44-வது நிமிடத்தில் இந்திய வீரர் ராமன் தீப் சிங்கும், 45-வது நிமிடத்தில்  ஹர்மன்பிரீத் சிங்கும் தலா ஒரு கோல் அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

கோல்அடிக்கவும்,  பந்தை கடத்தவும் மிகவும் திணறிய பாகிஸ்தான அணி 49-வது நிமிடத்தில் அந்த அணி வீரர் அலி ஷான் கோல் அடித்து அணியின் மானத்தை காப்பாற்றினார். ஆனால், கடைசிவரை இந்திய அணியின் கோல் எண்ணிக்கையை சமன் செய்யாததையடுத்து, பாகிஸ்தான் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் சாய்த்து இந்திய அணி வென்றது. இதையடுத்து, 9 புள்ளிகளுடன் இந்திய அணி சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெற்றது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IND vs NZ 1வது ODI: இந்திய அணி களமிறங்கும் புதிய மைதானம்.. இத்தனை கோடியில் உருவாக்கப்பட்டதா..?
ருத்ராஜ் மரண அடி.. ஜாம்பவான் சாதனையை ஓவர்டேக் செய்து மாஸ்.. சிஎஸ்கே ரசிகர்கள் ஹேப்பி!