தாமஸை வீழ்த்தி 400-வது வெற்றியைப் பிடித்தார் சோங்கா…

 
Published : Feb 20, 2017, 11:04 AM ISTUpdated : Sep 19, 2018, 01:36 AM IST
தாமஸை வீழ்த்தி 400-வது வெற்றியைப் பிடித்தார் சோங்கா…

சுருக்கம்

ராட்டெர்டாம் உலக டென்னிஸ் போட்டியில் தாமஸை வீழ்த்தி, சோங்கா 400-வது வெற்றியப் பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளார்.

நெதர்லாந்தின் ராட்டெர்டாம் நகரில் நடைபெற்று வரும் உலக டென்னிஸ் போட்டியில் சோங்கா தனது அரையிறுதியில் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் செக்.குடியரசின் தாமஸ் பெர்டிச்சை தோற்கடித்தார்.

இதன்மூலம் அவர் தனது டென்னிஸ் வாழ்க்கையில் 400-ஆவது வெற்றியைப் பெற்றார்.

சோங்கா தனது இறுதிச் சுற்றில் பெல்ஜியத்தின் டேவிட் கோபினுடன் மோதுகிறார்.

இதேபோன்று, கோபின் தனது அரையிறுதியில் 6-1, 6-3 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் பியர் ஹியூஸ் தோற்கடித்தார்.

2011-இல் இதே ராட்டெர்டாம் போட்டியில் இறுதிச்சுற்று வரை முன்னேறிய சோங்கா, இந்த முறை சாம்பியன் பட்டம் வெல்வதே தனது இலக்காக கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஹாட்ரிக் கோல் அடித்த கிலியன் எம்பாப்பே யார் தெரியுமா? இவரோட வேல்யூ தெரியுமா?
உள்நாட்டு கிரிக்கெட்டின் கிங்..! இந்திய 'ஸ்டார்' ஆல்ரவுண்டர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!