இறுதிச் சுற்றில் கால் பதித்தது இந்திய மகளிரணி…

 
Published : Feb 20, 2017, 10:45 AM ISTUpdated : Sep 19, 2018, 01:36 AM IST
இறுதிச் சுற்றில் கால் பதித்தது இந்திய மகளிரணி…

சுருக்கம்

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் தகுதிச் சுற்றில் இந்திய அணி இறுதிச் சுற்றில் கால்பதித்தது.

இலங்கை தலைநகர் கொழும்பில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்ததன் மூலம் "ஏ' பிரிவில் முதலிடம் பிடித்து இறுதிச் சுற்றில் கால் பதித்துள்ளது.

முன்னதாக முதலில் பேட் செய்த பாகிஸ்தான், இந்தியாவின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் 43.4 ஓவர்களில் 67 ஓட்டங்களுக்குச் சுருண்டது.

அந்த அணியில் அதிகபட்சமாக ஆயிஷா ஜாபர் 19 ஓட்டங்கள் எடுத்தனர்.

இந்தியத் தரப்பில் இக்தா பிஸ்தா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் பேட் செய்த இந்திய அணி 22.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 70 ஓட்டங்கள் எடுத்து வெற்றி கண்டது.

தீப்தி சர்மா ஆட்டமிழக்காமல் 29 ஓட்டங்களும், ஹர்மான்பிரீத் கெளர் 24 ஓட்டங்களும் எடுத்தனர்.

இந்திய அணி தனது இறுதிச் சுற்றில் தென் ஆப்பிரிக்காவை சந்திக்கிறது.

இந்த ஆட்டம் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெற இருக்கிறது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஹாட்ரிக் கோல் அடித்த கிலியன் எம்பாப்பே யார் தெரியுமா? இவரோட வேல்யூ தெரியுமா?
உள்நாட்டு கிரிக்கெட்டின் கிங்..! இந்திய 'ஸ்டார்' ஆல்ரவுண்டர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!