தோனி அதிரடி நீக்கம் - பூனே அணியின் கேப்டன் பதவிக்கு தகுதி இல்லையாம்...!!!

 
Published : Feb 19, 2017, 02:34 PM ISTUpdated : Sep 19, 2018, 01:36 AM IST
தோனி அதிரடி நீக்கம் - பூனே அணியின் கேப்டன் பதவிக்கு தகுதி இல்லையாம்...!!!

சுருக்கம்

ஐ.பி.எல் தொடரில் புனே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து மகேந்திர சிங் தோனி நீக்கப்பட்டுள்ளார்.

ஐ.பி.எல். தொடரில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் விளையாட தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை அணியின் வீரர்கள், புதியதாக உருவாக்கப்பட்டுள்ள புனே அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

சென்னை அணியின் கேப்டன் தோனியை, புனே அணி 12.5 கோடி ரூபாய் கொடுத்து கேப்டனாக ஒப்பந்தம் செய்தது. ஆனால் தோனி தலைமையிலான புனே அணி மோசமாக தோல்வியடைந்தது.

இந்நிலையில், ஐ.பி.எல் தொடரில் புனே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து மகேந்திர சிங் தோனி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கடந்த ஐ.பி.எல் தொடரில் தோனி தலைமையிலான அணி 14 போட்டிகளில் 5 போட்டிகள் மட்டுமே விளையாடி வெற்றி பெற்றது.

இதனால் புனே அணி 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தோனிக்கு பதிலாக ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் வரும் ஐ.பி.எல். தொடரில் புனே அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஹாட்ரிக் கோல் அடித்த கிலியன் எம்பாப்பே யார் தெரியுமா? இவரோட வேல்யூ தெரியுமா?
உள்நாட்டு கிரிக்கெட்டின் கிங்..! இந்திய 'ஸ்டார்' ஆல்ரவுண்டர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!