
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் மகளிரணி கால் பதித்துள்ளது.
உலகக் கோப்பை போட்டிக்கான தகுதிச்சுற்று இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடைபெற்று வருகிறது.
அதில் சூப்பர் சிக்ஸ் சுற்றில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியதின் மூலம் இரண்டாவது வெற்றியைப் பெற்ற இந்திய அணி, உலகக் கோப்பையில் விளையாட தகுதி பெற்றுள்ளது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேச அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 155 ஓட்டங்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பர்கானா ஹக் 50, ஷர்மின் அக்தர் 35 ஓட்டங்கள் எடுத்தனர்.
இந்தியத் தரப்பில் மான்ஸி ஜோஷி 3 விக்கெட்டுகளையும், தேவிகா வைத்யா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய இந்திய அணியில் தீப்தி சர்மா 1 ரன்னில் கிளம்ப, மோனா மேஷ்ராமுடன் இணைந்தார் கேப்டன் மிதாலி ராஜ்.
அசத்தலாக ஆடிய இந்த ஜோடி ஆட்டமிழக்காமல் 136 ஓட்டங்கள் சேர்க்க, இந்தியா 33.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 158 ஓட்டங்கள் எடுத்து வெற்றிக் கண்டது.
மோனா 92 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 78, மிதாலி ராஜ் 87 பந்துகளில் 1 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 73 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
மோனா மேஷ்ராம் ஆட்டநாயகியாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து உலகக் கோப்பை போட்டிக்கு இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தேர்வானது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.