டிஆர்எஸ் சர்ச்சைகளால் இந்திய வீரர்கள் கவனம் சிதறவில்லை.

Asianet News Tamil  
Published : Mar 15, 2017, 11:43 AM ISTUpdated : Sep 19, 2018, 02:42 AM IST
டிஆர்எஸ் சர்ச்சைகளால் இந்திய வீரர்கள் கவனம் சிதறவில்லை.

சுருக்கம்

TRS controversy focused on the Indian players were shattered

டிஆர்எஸ் மற்றும் ஆடுகளம் தொடர்பான சர்ச்சைகளால் இந்திய வீரர்கள் கவனம் சிதறவில்லை என்று இந்திய அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே கூறியுள்ளார்.

இதுகுறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே கூறியது:

“வீரர்களிடம் இருந்து வெளிப்படும் அவர்களது இயல்பான உள்ளுணர்வுகளை கட்டுப்படுத்த நான் விரும்பவில்லை. அதேபோல், அவர்களிடம் எதிர்பார்ப்பதை தான் அவர்கள் செய்ய வேண்டும் என்றும் விரும்பவில்லை.

வீரர்களின் ஆக்ரோஷம் தொடர்பாக நாம் ஆழ்ந்து யோசிக்க வேண்டியதில்லை என்று கருதுகிறேன். போட்டியின்போது, ஒவ்வொரு வீரர்களும் தங்களது உணர்வுகளை ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள்.

உண்மையில் அதுதான் நமக்கு வேண்டும். ஏனெனில் ஒரு வீரரிடம் உள்ள திறமை மற்றும் ஆக்ரோஷம் என்னவோ அதை அவர் வெளிப்படுத்தத் தான் நாம் எதிர்பார்க்கிறோம்.

இந்தியா - ஆஸ்திரேலியா தொடரைப் பொருத்த வரையில் இது முக்கியமான தருணம். இரு அணிகளும் சம நிலையில் இருப்பதால், இரு தரப்புமே கடுமையாக விளையாடும். எனினும், இந்தத் தொடரில் கிரிக்கெட் விளையாட்டுதான் வெல்லும்.

போட்டியின்போது, இதர சர்ச்சைகளை தவிர்த்து விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டியது முக்கியம் என்று நம்புகிறோம். வீரர்களே விளையாட்டில் முக்கியமானவர்கள். அவர்கள் தங்களது பொறுப்புகளை உணர்ந்துள்ளனர்.

டிஆர்எஸ் சர்ச்சையை பொருத்த வரையில், பிசிசிஐ மேற்கொண்ட முதிர்ச்சியான முடிவு பாராட்டத்தக்கது. ஏனெனில், அப்போது தான் தொடர்ந்து விளையாட்டில் கவனம் செலுத்த முடியும்.

அந்த வகையில் இரு நாட்டு கிரிக்கெட் வாரியமும் இணைந்து அறிக்கை வெளியிட்டு, அடுத்தகட்டத்துக்கு நகர்ந்தது மகிழ்ச்சியளிக்கிறது.

டிஆர்எஸ் சர்ச்சை போட்டியை பாதிக்கவில்லை. நாங்கள் விளையாட மட்டுமே விரும்புகிறோம். நாங்கள் அதுபற்றி பேசிக் கொண்டிருக்கவில்லை; நீங்கள் தான் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். டிஆர்எஸ் மற்றும் ஆடுகளம் தொடர்பான சர்ச்சைகளில் வீரர்கள் கவனம் சிதறவில்லை.

முதல் டெஸ்ட் தோல்விக்குப் பிறகு இந்திய அணி அருமையாக மீண்டு வந்துள்ளது. பெங்களூரு டெஸ்ட் வெற்றி, அணிக்கான ஒரு பரிசாகும்:” என்று அனில் கும்ப்ளே கூறினார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய கிரிக்கெட் வாரியம்.. இந்திய அணி வங்கதேசம் சுற்றுப்பயணம்? புது தகவல்!
2026 உலகக் கோப்பை போட்டியை யாரும் பார்க்க மாட்டாங்க! ஐசிசி-யை வறுத்தெடுத்த அஸ்வின்!