டோடிக்குடன் கைகோர்த்து இரண்டாவது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை நழுவவிட்டார் சானியா…

 
Published : Jan 30, 2017, 12:12 PM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
டோடிக்குடன் கைகோர்த்து இரண்டாவது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை நழுவவிட்டார் சானியா…

சுருக்கம்

மெல்போர்ன்

இவான் டோடிக்குடன் கைகோர்த்து சானியா மிர்சா இரண்டாவது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை நழுவ விட்டார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில், கலப்பு இரட்டையர் இறுதி ஆட்டத்தில் சானியா மிர்சா (இந்தியா) - இவான் டோடிக் (குரோஷியா) இணை, அபிகைல் ஸ்பியர்ஸ் (அமெரிக்கா)- ஜூவான் செபாஸ்டியன் கபால் (கொலம்பியா) இணையுடன் நேற்று மோதியது.

போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தை பெற்றிருந்த அனுபவம் வாய்ந்த சானியா ஜோடி, அதிக பிரபலமில்லாத அபிகைல் - கபால் கூட்டணியை எளிதில் வீழ்த்தி விடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் களத்தில் நடந்தது வேறு. இவான் டோடிக், சர்வீஸ் போடுவதிலும் சரி, ஷாட் அடிப்பதிலும் சரி நிறைய தவறுகளை செய்தார். அவரது தடுமாற்றம் எதிர் ஜோடிக்கு சாதகமாக போய் விட்டது.

ஆட்டத்தின் முடிவில் அபிகைல் - கபால் இணை 6-2, 6-4 என்ற நேர் செட்டில் சானியா இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை அள்ளிச் சென்றது.

இவான் டோடிக்குடன் கைகோர்த்த பிறகு சானியா நழுவ விட்ட 2-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். ஏற்கனவே 2016-ஆம் ஆண்டு பிரெஞ்ச் ஓபனிலும் இவர்கள் இறுதி ஆட்டத்தில் தோற்றனர்.

35 வயதான அமெரிக்க அபிகைல் ஸ்பியர்சுக்கு இது தான் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.

‘இந்த சீசனுடன் நான் ஓய்வு பெற திட்டமிட்டு இருக்கிறேன். எனவே இது தான் எனது கடைசி ஆஸ்திரேலிய ஓபன் போட்டியாக இருக்கும்.

ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்யும்படி சிலர் வற்புறுத்துகிறார்கள். ஒரு வேளை எனது முடிவை மாற்றிக் கொண்டால், அடுத்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனுடன் ஓய்வு பெறுவேன்.

ஏனெனில் ஆஸ்திரேலிய ஓபன் எனக்கு பிடித்தமான போட்டி. இங்கு எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள், என்றுத் தெரிவித்தார்.

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Ind vs NZ: கோலி, ரோகித் இன்.. 3 வீரர்களுக்கு கல்தா கொடுத்த தேர்வு குழு..?
ரோகித், விராட் கோலி ரசிகர்களே ரெடியா? அடுத்த மேட்ச் எப்போது? லைவ் உண்டா?