
சையது முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் கர்நாடக அணியைத் தோற்கடித்தது.
சையது முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கர்நாடக அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 144 ஓட்டங்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சமார்த் 40 ஓட்டங்கள் எடுத்தார்.
தமிழகம் தரப்பில் விக்னேஷ், நடராஜன், ஆர்.எஸ்.ஷா, முருகன் அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
பின்னர் ஆடிய தமிழக அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 145 ஓட்டங்கள் எடுத்து வெற்றி கண்டது.
முருகன் அஸ்வின் 20 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 34 ஓட்டங்கள் எடுத்தார்.
முன்னதாக தினேஷ் கார்த்திக் 33 பந்துகளில் 45 ஓட்டங்களும், சங்கர் 26 பந்துகளில் 30 ஓட்டங்களும் எடுத்தனர்.
கர்நாடகம் தரப்பில் கெளதம் 2 விக்கெட் எடுத்தார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.