நியூசிலாந்து – ஆஸ்திரேலியா இன்று மோதுகிறது. யாருக்கு வெற்றி?

 
Published : Jan 30, 2017, 12:07 PM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
நியூசிலாந்து – ஆஸ்திரேலியா இன்று மோதுகிறது. யாருக்கு வெற்றி?

சுருக்கம்

ஆக்லாந்து,

யாருக்கு வெற்றி என்று நோக்கில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று தங்களது முதலாவது ஒரு நாள் போட்டியை விளையாடுகின்றன.

நியூசிலாந்துக்குச் சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது.

இதன்படி முதலாவது ஒரு நாள் போட்டி ஆக்லாந்தில் இன்று நடக்கிறது.

காயம் காரணமாக ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் இந்த தொடரில் ஆடவில்லை. துணை கேப்டன் டேவிட் வார்னருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்த இருக்கிறார்.

அதே சமயம் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, முழுமையான அணியாக களம் இறங்குகிறது.

சொந்த மண்ணில் ஆடுவது நியூசிலாந்துக்கு சாதகமான அம்சமாகும்.

இரு அணிகளின் பட்டியல்:

நியூசிலாந்து:

மார்ட்டின் கப்தில், டாம் லாதம், வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், நீல் புரூம், காலின் முன்ரோ, ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னெர், டிம் சவுதி, மேட் ஹென்றி அல்லது லோக்கி பெர்குசன், டிரென்ட் பவுல்ட்,

ஆஸ்திரேலியா:

ஆரோன் பிஞ்ச், ஷான் மார்ஷ், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், டிராவிஸ் ஹெட், மேக்ஸ்வெல், மேத்யூ வேட் (கேப்டன்), ஜேம்ஸ் பவுல்க்னெர், மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ், ஆடம் ஜம்பா, ஹேசில்வுட்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Ind vs NZ: கோலி, ரோகித் இன்.. 3 வீரர்களுக்கு கல்தா கொடுத்த தேர்வு குழு..?
ரோகித், விராட் கோலி ரசிகர்களே ரெடியா? அடுத்த மேட்ச் எப்போது? லைவ் உண்டா?