ஐபிஎல் டிக்கெட் விற்பனை ஒத்திவைப்பு...! தமிழனுக்கு கிடைத்த வெற்றி...!

 
Published : Apr 11, 2018, 05:07 PM ISTUpdated : Sep 19, 2018, 02:14 AM IST
 ஐபிஎல் டிக்கெட் விற்பனை ஒத்திவைப்பு...! தமிழனுக்கு கிடைத்த வெற்றி...!

சுருக்கம்

ticket sale postponded due to protest in tamilnadu

சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்த விட மாட்டோம் என தமிழ் அமைப்புகள்  மற்றும் பல்வேறு கட்சிகள் போராட்டம் நடத்தின.

இதனை  தொடர்ந்து சென்னையில் வரும்  20 ஆம் தேதி  நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிக்கான  டிக்கெட் விற்பனை ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக  தமிழ்நாடு  கிரிக்கெட் வாரியம்  அறிவித்து  உள்ளது  

சென்னை ராஜஸ்தான் இடையே வரும்  20 ஆம்  தேதி  சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடைபெற இருந்தது.

நேற்று பெரும் சவாலுக்கு இடையே போட்டி நடைபெற்றது.இந்நிலையில், இனி வரும் போட்டிகள் நடக்கும் போதும், அன்றைய  தினம் போராட்டம் வலுக்கும் என  பல்வேறு கட்சியினர் தெரிவித்து இருகின்றனர்.

இந்நிலையில்,இன்று  டெல்லியில் பிசிசிஐ மற்றும் ஐ பிஎல் நடத்திய  ஆலோசனையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அடுத்து நடைபெற இருந்த 6 விளையாட்டு  போட்டிகளும் வேறு  மாநிலத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது என்ற  தகவல் வெளியானது.

இதனை தொடர்ந்து தற்போது  நாளை  முதல் டிக்கெட் விற்பனை செய்ய  இருந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் தெரிவித்து  உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

2nd T20: இலங்கையை மீண்டும் ஊதித்தள்ளிய இந்தியா! ஷெபாலி வர்மா 'சரவெடி' அரைசதம்!
பெங்களூரு சின்னசாமியில் விராட் கோலி ஆட்டம்.. ஆனால் ரசிகர்கள் பார்க்க முடியாது.. ஏன் தெரியுமா?