
சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்த விட மாட்டோம் என தமிழ் அமைப்புகள் மற்றும் பல்வேறு கட்சிகள் போராட்டம் நடத்தின.
இதன் விளைவாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அடுத்து நடைபெற இருந்த 6 விளையாட்டு போட்டிகளும் வேறு மாநிலத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது
சென்னையில் நடைபெற இருந்த அனைத்து போட்டிகளும் திருவனந்த புரத்திற்கு மாற்ற முடிவு செய்யப் பட்டு உள்ளது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் வலுத்து வரும் நிலையில், ஐபிஎல் போட்டிகள் தமிழகத்தில் நடைபெற கூடாது என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர்,விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், தமிழக வாழ்வுரிமை கட்சியினர், ரஜினி மக்கள் மன்றம் உள்ளிட்ட அனைவரும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் மீறி பலத்த போலிஸ் பாதுகாப்புடன் ஐபிஎல் போட்டிகள் நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிலையில், அடுத்து வரும் விளையாட்டு போட்டிகள் கூட நடைபெற விடாமல் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், வேறு மாநிலத்தில் நடத்த ஐபி எல் திட்டமிட்டு உள்ளது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.