சுதிர்மான் கோப்பை போட்டியில் இந்த முறையும் சீனாவிடம் தோற்றது இந்தியா.

 
Published : May 27, 2017, 12:08 PM ISTUpdated : Sep 19, 2018, 12:40 AM IST
சுதிர்மான் கோப்பை போட்டியில் இந்த முறையும் சீனாவிடம் தோற்றது இந்தியா.

சுருக்கம்

This time India lost to China in the Sudhirman Cup.

சுதிர்மான் கோப்பை பாட்மிண்டன் போட்டியின் காலிறுதியில் 2011-ஆம் வருடத்தைப் போல இந்த முறையும் சீனாவிடம் 0-3 என்ற கணக்கில் தோற்று வெளியேறியது இந்தியா.

சுதிர்மான் கோப்பை பாட்மிண்டன் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற காலிறுதியில், முதலில் கலப்பு இரட்டையர்களுக்கான ஆட்டம் நடைபெற்றது.

இதில், போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா - சாத்விக்சாய்ராஜ் ராங்கி ரெட்டி இணை, உலகத் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் சீனாவின் லு காய் - ஹுவாங் யாகியாங் இணையுடன் மோதியது.

இரு இணைகளுக்கும் இடையே ஒரு மணி நேரம் 3 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் சீனாவின் லு காய் - ஹுவாங் யாகியாங் ஜோடி 16-21, 21-13, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றிப் பெற்று கர்சித்தது.

அடுத்து நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான சென் லாங்கை மோதினர்.

இருவருக்கும் இடையே 48 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தின் முடிவில் ஸ்ரீகாந்த் 16-21, 17-21 என்ற செட் கணக்கில் அதிர்ச்சித் தோல்வி கண்டு சென்லாங்க் வெற்றிப் பெற்றார்.

மூன்றாவதாக நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி - சிரக் சென் இணை, சீனாவின் ஃபு ஹாய்ஃபெங் - ஸாங் நான் இணையுடன் மோதியது.

இதில், 9-21, 11-21 என்ற செட் கணக்கில் அரைமணி நேரத்தில் வீழ்ந்தது இந்திய இணை.
இதனால், மொத்தம் உள்ள ஐந்து ஆட்டங்களில் சீனா 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றதால், எஞ்சிய இரு ஆட்டங்களும் கைவிடப்பட்டன.

அதில், மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்துவும், மகளிர் இரட்டையர் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா - சிக்கி ரெட்டி இணையும் விளையாடுவதாக இருந்தது.

சுதிர்மான் கோப்பை போட்டியின் காலிறுதியில் இந்தியா சந்திக்கும் 2-ஆவது தோல்வியாகும். முன்னதாக, கடந்த 2011-ஆம் ஆண்டு காலிறுதியிலும் சீனாவிடமே தோல்வி கண்டது இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IND vs SA 4வது T20: ஒருவழியாக சுப்மன் கில் நீக்கம்.. இந்திய அணியில் 3 மாற்றங்கள்.. பிளேயிங் லெவன்!
IPL 2026 Auction Live Updates : ஐபிஎல் 2026 ஏலம் லைவ் அப்டேட்ஸ்: அதிக விலைக்குப் போன வீரர்கள் யார்?