இன்று தொடங்குகிறது 3-வது டெஸ்ட்…

Asianet News Tamil  
Published : Oct 09, 2016, 03:27 AM ISTUpdated : Sep 19, 2018, 01:41 AM IST
இன்று தொடங்குகிறது 3-வது டெஸ்ட்…

சுருக்கம்

இந்தியா-நியூஸிலாந்து இடையிலான 3-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இந்தூரில் சனிக்கிழமை தொடங்குகிறது.
>
> இதுகுறித்து கேப்டன் கோலி அளித்த பேட்டி பின்வருமாறு:
>
> “இந்தத் தொடரின் முதல் இரு போட்டிகளிலும் வென்றுள்ள இந்திய அணி, 3-ஆவது டெஸ்டிலும் வென்று நியூஸிலாந்து அணியை "ஒயிட் வாஷ்' ஆக்கும் முனைப்பில் களமிறங்குகிறது.
> இந்திய அணியைப் பொறுத்தவரையில் பேட்டிங், பெளலிங் என இரண்டிலும் வலுவாகவே உள்ளது. கடந்த இரு போட்டிகளில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கே.எல்.ராகுல், ஷிகர் தவன் ஆகிய இருவரும் காயம் காரணமாக விலகிவிட்டனர். இதனால் முரளி விஜயுடன் தொடக்க வீரராக கெளதம் கம்பீர் களமிறங்குகிறார். 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள கம்பீருக்கு இந்தப் போட்டி நல்ல வாய்ப்பாகும். இதில் சிறப்பாக ஆடி ரன் குவிக்கும்பட்சத்தில் இந்திய அணியில் கம்பீர் தனது இடத்தை தக்கவைக்க முடியும்.
> மிடில் ஆர்டரைப் பொறுத்தவரையில் சேதேஷ்வர் புஜாரா, கேப்டன் கோலி, அஜிங்க்ய ரஹானே, ரோஹித் சர்மா, ரித்திமான் சாஹா ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். இவர்கள் அனைவருமே ஓரளவு நல்ல ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாகும்.
>
> கடந்த போட்டியில் இக்கட்டான நேரத்தில் 82 ரன்கள் குவித்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டார் ரோஹித் சர்மா. கடந்த போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் அரை சதமடித்து இந்தியா வலுவான ஸ்கோரை குவிக்க உதவினார் சாஹா.
>
> வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் முகமது சமி சிறப்பாக பந்துவீசி வருகிறார். புவனேஸ்வர் குமார் காயம் காரணமாக விலகிவிட்டதால் உமேஷ் யாதவ் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க கோலி முடிவு செய்தால் அஸ்வின், ஜடேஜா ஆகியோருடன் 3-ஆவது சுழற்பந்து வீச்சாளராக அமித் மிஸ்ரா சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. கடந்த இரு போட்டிகளைப் போலவே இந்தப் போட்டியிலும் நியூஸிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு அஸ்வின் அச்சுறுத்தலாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.
>
> நியூஸிலாந்து அணியைப் பொறுத்தவரையில் உடல்நலக்குறைவு காரணமாக கடந்தப் போட்டியில் விளையாடாத கேப்டன் வில்லியம்சன் இந்தப் போட்டியில் களமிறங்குகிறார். டாம் லதாம், லுக் ரோஞ்சி உள்ளிட்டோர் ஓரளவு சிறப்பாக ஆடியபோதிலும், தொடக்க வீரர்களில் ஒருவரான மார்ட்டின் கப்டில், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ராஸ் டெய்லர் உள்ளிட்டோர் ரன் சேர்க்க முடியாமல் திணறி வருவது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகும்.
>
> வேகப்பந்து வீச்சில் டிரென்ட் போல்ட், மட் ஹென்றி ஆகியோர் ஓரளவு சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அதேநேரத்தில் நியூஸிலாந்து சுழற்பந்து வீச்சாளர்களால், இந்திய பந்துவீச்சாளர்கள் அளவுக்கு சிறப்பாக செயல்பட முடியவில்லை. இந்தப் போட்டியில் நியூஸிலாந்து அணி 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
>
> இந்தூர் மைதானத்தில் முதல்முறையாக டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. 3-ஆவது டெஸ்டில் சிறப்பாக விளையாடுவதற்கு திட்டமிட்டுள்ளோம். இங்கு மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. காலநிலையை நாம்
> கட்டுப்படுத்த முடியாது. இந்த மைதானத்தில் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டால் விக்கெட் எடுக்க முடியும். அதேநேரத்தில் பேட்ஸ்மேன்களும் இங்கு சிறப்பாக ஆட முடியும். மொத்தத்தில் இது டெஸ்ட் போட்டிக்கு ஏற்ற மைதானம்”. 
>
> இந்தியா (உத்தேச லெவன்)
>
> முரளி விஜய், கெளதம் கம்பீர், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி (கேப்டன்), அஜிங்க்ய ரஹானே, ரோஹித் சர்மா, ரித்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ஜடேஜா, முகமது சமி, அமித் மிஸ்ரா/உமேஷ் யாதவ்.
>
>
> நியூஸிலாந்து (உத்தேச லெவன்)
>
> டாம் லதாம், மார்ட்டின் கப்டில், கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர், லுக் ரோஞ்சி, மிட்செல் சேன்ட்னர், பிஜே.வாட்லிங் (விக்கெட் கீப்பர்), மட் ஹென்றி/நீல் வாக்னர், ஜீதன் படேல், இஷ் சோதி, டிரென்ட் போல்ட்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Vaibhav Sooryavanshi: 15 வயதில் ருத்ரதாண்டவம்! கெயில் சாதனையை காலி செய்யபோகும் சூர்யவன்ஷி! ப்ளே-ஆஃப் சுற்றில் RR!
IPL 2026-க்கு பிறகு குட்பை சொல்லும் 5 ஸ்டார் வீரர்கள்! அட! மிஸ்டரி ஸ்பின்னரும் இருக்காரா?