
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் 2018 முதல் போட்டியில் குரூப் ஏ-வில் இடம் பிடித்த ரஷியாவும், சௌதி அரேபியாவும் மோதுகின்றன.
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் 2018 ரஷியாவில் தொடங்க இன்னும் ஒரு மாதமே உள்ளது. உலகிலேயே பெரிய விளையாட்டுத் திருவிழாவான பிஃபா கால்பந்து போட்டிகள் தான் அதிகளவில் பார்வையாளர்களால் விரும்பி பார்க்கப்படும் விளையாட்டுகளில் முதலிடம் பெற்றுள்ளது.
கடந்த 1930-இல் முதல் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்றன. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து போட்டிகளை சர்வதேச கால்பந்து சம்மேளனம் பிஃபா நடத்தி வருகிறது.
பல்வேறு நாடுகள் போட்டிகளை நடத்த விண்ணப்பித்தாலும், அங்குள்ள விளையாட்டு அரங்குகள், வீரர்களுக்கான வசதிகள், போக்குவரத்து, செலவிடும் திறன் போன்றவற்றை பிஃபா குழு நேரில் சென்று ஆய்வு செய்யும்.
பின்னர் கூடும் அதன் பொதுக்குழுக் கூட்டத்தில் உறுப்பினர்கள் வாக்களித்து உலகக் கோப்பை போட்டியை நடத்தும் நாட்டை தேர்வு செய்வது வழக்கம்.
கடந்த 1930-ல் தொடங்கிய உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் இடையில் உலகப் போர்களால் 1942, 1946-ஆம் ஆண்டுகளில் நடைபெறவில்லை. இறுதியாக 2014-ல் பிரேசிலில் நடைபெற்ற போட்டியில் ஜெர்மனி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
ஜூன் 14-ஆம் தேதி தொடங்கும் போட்டிகள் ரஷியாவின் 12 விளையாட்டு தளங்களில் ஜூலை 15-ம் தேதி வரை நடைபெறுகின்றன.
ஜூன் 14-ஆம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் குரூப் ஏ-வில் இடம் பிடித்த ரஷியாவும் சௌதி அரேபியாவும் மோதுகின்றன.
போட்டியில் பங்கேற்றுள்ள அணிகளின் விவரம் வருமாறு:
குரூப் ஏ ரஷ்யா, உருகுவே, எகிப்து, சவுதி அரேபியா
குரூப் பி போர்ச்சுகல், ஸ்பெயின், ஈரான், மொராக்கோ
குரூப் சி பிரான்ஸ், பெரு, டென்மார்க், ஆஸ்திரேலியா
குரூப் டி ஆர்ஜெண்டீனா, குரோஷியா, ஐஸ்லாந்து, நைஜீரியா
குரூப் இ பிரேசில், சுவிட்சர்லாந்து, கோஸ்டா ரிகா, செர்பியா
குரூப் எப் ஜெர்மனி, மெக்ஸிகோ, ஸ்வீடன், தென் கொரியா
குரூப் ஜி பெல்ஜியம், இங்கிலாந்து, துனிஷியா, பனாமா
குரூப் ஹெச் போலந்து, கொலம்பியா, செனகல், ஜப்பான்
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.