
2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் புதிதாக ஐந்து விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளது என்றும் கிரிக்கெட் விளையாட்டு நீக்கப்பட்டுள்ளது என்று ஆசிய ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.
ஆசிய ஒலிம்பிக் குழு (ஓசிஏ), “கிரிக்கெட் போட்டிக்கு பெரிய அணிகள் தங்களின் முன்னணி வீரர்களை அனுப்புவதில்லை. அதனால் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இருந்து கிரிக்கெட் நீக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தோனேசியாவின் முக்கிய விளையாட்டான பென்காக் சிலாட், ஜுஜிட்ஸு, பாராகிளைடிங், ஜெட் ஸ்கை, ஸ்போர்ட் கிளைம்பிங் ஆகிய புதிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
மொத்தம் 39 விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளன. இது 2014 ஆசிய விளையாட்டுப் போட்டியைவிட அதிகமாகும். 2014-இல் 33 விளையாட்டுகள் இடம்பெற்றிருந்தன என குறிப்பிட்டுள்ளது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.