
தியோதர் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய "பி' அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய "ஏ' அணியை வென்றது.
தியோதர் கோப்பை கிரிக்கெட் போட்டி ஹிமாசல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் நேற்று பகலிரவாக நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த அங்கீத் பாவ்னே தலைமையிலான ஏ அணி 41.2 ஓவர்களில் 178 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அடுத்து ஆடிய ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பி அணிக்கு டக்வொர்த் லீவிஸ் முறையில் 43 ஓவர்களில் 175 ஓட்ட்னகள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி 26.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 175 ஓட்டங்கள் எடுத்து வென்றது.
டாஸ் வென்ற பி அணி முதலில் பந்துவீச தீர்மானிக்க, பேட் செய்த ஏ அணியில் அதிகபட்சமாக ரிக்கி புய் 5 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உள்பட 78 ஓட்டங்கள் எடுத்தார்.
பி அணியில் தர்மேந்திர சிங் ஜடேஜா 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.
பின்னர் ஆடிய பி அணியில் ஹனுமா விஹாரி 16 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 95 ஓட்டங்கள், ஷ்ரேயஸ் ஐயர் 28 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழிநடத்தினர்.
அபிமன்யு ஈஸ்வரன் 43 ஓட்டங்கள், ஸ்ரீகர் பரத் 8 ஓட்டங்ளுக்கு ஆட்டமிழந்தனர்.
ஏ அணி தரப்பில் முகமது ஷமி, கிருணால் பாண்டியா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
அதன்படி, தியோதர் கோப்பை போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய "பி' அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய "ஏ' அணியை வென்றது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.