
ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதியில் இருந்து விலகியதற்கு விகாஸ் கிருஷ்ணன் கட்டாயம் காரணத்தை சொல்லியே ஆகனும் என்று இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் (பிஎஃப்ஐ) விகாஸ்க்கு கிடுக்கிப்பிடி போட்டது.
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் கடந்த வாரம் நடைபெற்றது.
இதில், பங்கேற்ற விகாஸ் கிருஷண் 75 கிலோ எடைப் பிரிவில் தனது அரையிறுதியில் கொரியாவின் லீ டாங்யூனுடம் மோதுவதாக இருந்தது. ஆனால், போட்டியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார்.
அவரது அந்த நடவடிக்கைக்கு இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் தலைவர் அஜய் சிங் கண்டனம் தெரிவித்தார்.
அப்போது அவர் கூறியது: “விகாஸ் சிங் உலக குத்துச்சண்டை தொடரில் நிச்சயம் பங்கேற்கப்போவதில்லை. மேலும், ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதியில் இருந்து விலகியது தொடர்பான உரிய காரணத்தை, சம்மேளனத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவிடம் அவர் விளக்க வேண்டும்.
காயம் காரணமாகவே போட்டியில் இருந்து விலகியதாக அவர் கூறியுள்ளார். ஆனால், அது உண்மைதானா என கண்டறிய வேண்டியுள்ளது.
விகாஸ் கிருஷண் என்னை சந்திக்க விரும்பினால், தாராளமாக சந்திக்கலாம். ஆனால், அவர் தனது செயலுக்கான விளக்கத்தை கண்டிப்பாக அளிக்க வேண்டும். அதுதொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கையை ஒழுங்கு நடவடிக்கைக் குழு மேற்கொள்ளும்” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.