
கூடைப்பந்து வீரர்கள் தங்களது மதச்சார்புடைய தலைப்பாகைகளை அணிய விதித்திருந்த தடையை சர்வதேச கூடைப்பந்து சம்மேளனம் (எஃப்ஐபிஏ) திரும்ப பெற்றுள்ளதால் இனி கூடைப்பந்து வீரர்கள் தங்களது மதச்சார்புடைய தலைப்பாகைகளை அணிய தடையில்லை.
இந்திய கூடைப்பந்து சம்மேளனம் (பிஎஃப்ஐ) அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில், “கூடைப்பந்தாட்ட வீரர்கள் ஆடுகளத்தில் இருக்கும்போது தலைப்பாகை, நகைகள் உள்ளிட்டவற்றை அணிய அனுமதி மறுத்து கடந்த 2014-ஆம் ஆண்டு விதிகளில் திருத்தம் கொண்டு வந்திருந்தது.
இதனால் அந்த ஆண்டில் சீனாவில் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியின்போது இந்திய வீரர்களான அம்ஜியோத் மற்றும் அம்ரித்பால் சிங் ஆகியோர் தங்களது தலைப்பாகைகளை அகற்ற வற்புறுத்தப்பட்டனர்.
இதனிடையே, எஃப்ஐபிஏ-வின் இந்த முடிவுக்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு எழுந்தது. முஸ்லிம், யூத மதத்தைச் சேர்ந்த வீரர்களும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பை அடுத்து, விதிகளில் மேற்கொண்ட திருத்தத்தை திரும்பப் பெறும் நடவடிக்கையை எஃப்ஐபிஏ மேற்கொண்டது.
அதுதொடர்பான முடிவு கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற எஃப்ஐபிஏவின் பொதுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது. எஃப்ஐபிஏவில் உறுப்பினர்களாக இருக்கும் 139 நாடுகளும் அதற்கான ஆதரவை ஒருமனதாக தெரிவித்தன” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.