
காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பங்கேற்க தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழு ஆஸ்திரேலியா புறப்பட்டது.
காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெறவுள்ளது. இதில், பங்கேற்பதற்காக தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரரான சரத் கமல் (35) தலைமையிலான ஒன்பது பேர் கொண்ட குழு நேற்று புறப்பட்டது.
டேபிள் டென்னிஸில் மூன்று முறை தங்கம் வென்றுள்ள சரத் கமல், ஆடவர் குழு பயிற்சியாளர் மஸிமோ காஸ்டான்டினி, மகளிர் குழு பயிற்சியாளர் சௌம்யாதீப் ராய் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் சிக்கிய முன்னணி வீரரான சௌம்யாஜித் கோஷின் பெயர் கோல்டுகோஸ்ட் வீரர்கள் பட்டியலில் இருந்து கடைசி நேரத்தில் நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முறை காமன்வெல்த் போட்டியில் குறைந்தது நான்கு பதக்கங்களையாவது நமது வீரர்கள் வெல்வார்கள் என்று காஸ்டான்டினி நம்பிக்கை தெரிவித்துவிட்டு சென்றார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.