
சர்வதேச கிராண்ட் மாஸ்டர்ஸ் மற்றும் 13 வயதிற்கு உள்பட்டோருக்கான ஜூனியர் செஸ் போட்டி மும்பையில் வரும் 30-ஆம் தேதி தொடங்குகிறது.
சர்வதேச கிராண்ட்மாஸ்டர்ஸ் போட்டியுடன் உள்ளடங்கிய 3-வது ஐஐஎஃப்எல் வெல்த் மும்பை சர்வதேச டென்னிஸ் போட்டி டிசம்பர் 30-ல் தொடங்கி ஜனவரி 7-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
சீனியர்கள் கலந்து கொள்ளும் கிராண்ட்மாஸ்டர் போட்டிக்கு ரூ.12 இலட்சமும், ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டிக்கு ரூ.8 இலட்சமும் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தப் போட்டியில் 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்தப் போட்டியில் கலந்து கொள்பவர்களின் விவரங்கள் மற்றும் தேதி குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று போட்டிகளை ஏற்பாடுகளை செய்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர் செஸ் ஜாம்பவான்கள்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.