இலங்கை மண்ணில் முதல்முறையாக தொடரை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த ஜிம்பாப்வே…

Asianet News Tamil  
Published : Jul 11, 2017, 10:22 AM ISTUpdated : Sep 19, 2018, 12:52 AM IST
இலங்கை மண்ணில் முதல்முறையாக தொடரை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த ஜிம்பாப்வே…

சுருக்கம்

The historic achievement of Zimbabwe the first time in the soil of Sri Lanka

இலங்கைக்கு எதிரான 5-ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டதன்மூலம் ஜிம்பாப்வே 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இலங்கையின் அம்பணத்தோட்டத்தில் நேற்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே பீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து பேட் செய்த இலங்கை அணி, ஜிம்பாப்வேயின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. இதனால் அந்த அணியால் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 203 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இலங்கை தரப்பில் குணரத்னே ஆட்டமிழக்காமல் 59 ஓட்டங்கள், குணதிலகா 52 ஓட்டங்கள் எடுத்தனர்.

ஜிம்பாப்வே தரப்பில் சிக்கந்தர் ராஸா 3 விக்கெட்டுகளையும், கிரெமர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய ஜிம்பாப்வே அணியில் மஸகட்ஸா - சாலமோன் மிர் இணை முதல் விக்கெட்டுக்கு 14.2 ஓவர்களில் 92 ஓட்டங்கள் சேர்த்து அதிரடி தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்தது.

சாலமோன் மிர் 32 பந்துகளில் 43 ஓட்டங்கள் சேர்த்து வெளியேற, முஸகன்டா களம்புகுந்தார். மறுமுனையில் அசத்தலாக ஆடிய மஸகட்ஸா, ஜிம்பாப்வே 24 ஓவர்களில் 137 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது 86 பந்துகளில் 1 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 73 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த கிரேக் இர்வின், சீன் வில்லியம்ஸ் ஆகியோர் தலா 2 ரன்களில் வெளியேற, முஸகன்டா 37 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு மால்கம் வாலர், பீட்டர் மூர் ஆகியோர் தலா ஒரு ஓட்டத்தில் ஆட்டமிழக்க, 34.4 ஓவர்களில் 175 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது ஜிம்பாப்வே.

இலங்கை வெற்றி பெறலாம் என எதிர்பார்க்கப்பட்டபோது 8-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த சிக்கந்தர் ராஸா - கேப்டன் கிரீம் கிரெமர் ஜோடி அசத்தலாக ஆட, 38.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 204 ஓட்டங்கள் எடுத்து வெற்றிக் கண்டது ஜிம்பாப்வே.

சிக்கந்தர் ராஸா 27 ஓட்டங்கள், கிரெமர் 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இலங்கை தரப்பில் தனஞ்ஜயா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சிக்கந்தர் ராஸா ஆட்டநாயகன் விருதையும், மஸகட்ஸா தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றனர்.

இலங்கை மண்ணில் முதல்முறையாக தொடரை வென்றதும், கடந்த 8 ஆண்டுகளில் வெளிநாட்டு மண்ணில் ஜிம்பாப்வே அணி வெற்றிப் பெற்றதும் அதன் வரலாற்றுச் சாதனையாக அமைந்தது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IND vs NZ: தமிழக வீரர் விலகல்.. மாற்று வீரர் இவரா? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்!
IND vs NZ 1st ODI: மரண காட்டு காட்டிய விராட் கோலி..! இமாலய இலக்கை ஊதித்தள்ளிய இந்தியா..