
இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதும் மூன்று ஆட்டங்கள் கொண்ட டி-20 போட்டியின் முதல் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று ஆட்டங்கள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.
இந்திய அணியைப் பொருத்த வரையில், இதே நியூஸிலாந்துக்கு எதிரான மூன்று ஆட்டங்களைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை சமீபத்தில் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
ஆனால், டி-20 வரலாற்றை கணக்கில் கொண்டால், கடந்த ஆண்டில் நியூஸிலாந்திற்கு எதிரான டி-20 ஆட்டங்களில் இந்தியா படுதோல்வி அடைந்துள்ளது. இதில், டி-20 உலகக் கோப்பை போட்டியும் அடங்கும்.
அணியின் பேட்ஸ்மேன்களைப் பொருத்த வரையில், கடைசி ஒருநாள் ஆட்டத்தில் ரோஹித் சர்மா, கேப்டன் கோலி உள்ளிட்ட வீரர்கள் ரன் குவித்து தகுந்த ஃபார்மில் உள்ளனர். அவர்களுக்குத் துணையாக ஷிகர் தவன், எம்.எஸ்.தோனி ஆகியோர் இருக்கின்றனர்.
ஆல் ரௌண்டர் பிரிவில் ஹார்திக் பாண்டியா பலம் சேர்க்கிறார். வேகப்பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரீத் பூம்ராவும், சுழற்பந்துவீச்சில் யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவும் அணிக்கு பலமாக உள்ளனர்.
நியூஸிலாந்து அணியைப் பொருத்த வரையில், ஒருநாள் தொடரில் கண்ட தோல்விக்கு, டி-20 தொடரில் பதிலடி கொடுக்கும் முனைப்புடன் களம் காணும். அணியின் பேட்டிங்கில் ராஸ் டெய்லர், கேன் வில்லியம்சன், டாம் லதாம் ஆகியோர் ரன் குவிப்பில் ஈடுபடலாம். இந்திய பேட்ஸ்மேன்களுக்கு டஃப் கொடுக்க டிரென்ட் போல்ட், மிட்செல் சேன்ட்னர் ஆகியோர் இருக்கின்றனர்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறும் இந்தியாவின் மூத்த பந்துவீச்சாளரான ஆஷிஷ் நெஹ்ராவுக்கு இது கடைசி ஆட்டமாகும். இந்த ஆட்டத்தை அவருக்கான பிரியாவிடை ஆட்டமாக வழங்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.