
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 40-ஆவது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது டெல்லி அணி.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 40-ஆவது லீக் ஆட்டம் டெல்லி – ஐதரபாத அணிகளுக்கு இடையே டெல்லியில் நேற்று இரவு நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற டெல்லி, முதலில் பந்துவீச தீர்மானித்தது. பேட்டிங் செய்ய வந்த ஐதராபாதில் தொடக்க வீரர் வார்னர், 21 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 30 ஓட்டங்களுக்கு முகமது சமி பந்துவீச்சில் போல்டானார்.
அவரைத் தொடர்ந்து கேன் வில்லியம்ஸன் களத்துக்கு வர, மறுமுனையில் நின்றிருந்த ஷிகர் தவன், 17 பந்துகளுக்கு 4 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 28 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அமித் மிஸ்ரா பந்துவீச்சில் ஷ்ரேயாஸ் ஐயரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த யுவராஜ் சிங் அதிரடி காட்ட 34 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் அரைசதம் கடந்தார்.
கேன் வில்லியம்ஸன் 24 பந்துகளில் தலா ஒரு பவுண்டரி மற்றும் சிக்ஸருடன் 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முகமது சமி பந்துவீச்சில் கிறிஸ் மோரிஸிடம் கேட்ச் கொடுத்தார்.
அவரைத் தொடர்ந்து ஹென்ரிக்ஸ் களம் காண, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 185 ஓட்டங்கள் எடுத்தது ஐதராபாத்.
யுவராஜ் சிங் 41 பந்துகளில் 11 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 70 ஓட்டங்களுடனும், ஹென்ரிக்ஸ் 18 பந்துகளில் 2 பவுண்டரி அடித்து 25 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
டெல்லி தரப்பில் முகமது சமி 2, அமித் மிஸ்ரா 1 விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 186 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களம் கண்ட டெல்லி அணியில், தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் 24 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். உடன் வந்த கருண் நாயர் 39 ஓட்டங்களுக்கு பெவிலியன் திரும்பினார்.
தொடர்ந்து வந்த ரிஷப் பந்த் 20 பந்துகளில் 4 பவுண்டரி ஒரு சிக்ஸருடன் 34 ஓட்டங்களும், அடுத்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர் 25 பந்துகளில் 1 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 33 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த கோரே ஆண்டர்சன் சற்று அதிரடி காட்டினார். அவரும், கிறிஸ் மோரிஸும் இணைந்து அணியை வெற்றிக்கு நகர்த்தினர். 19.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ஓட்டங்கள் எடுத்து வென்றது டெல்லி.
ஆண்டர்சன் 24 பந்துகளுக்கு 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 41 ஓட்டங்களுடனும், கிறிஸ் மோரிஸ் 7 பந்துகளுக்கு தலா ஒரு பவுண்டரி மற்றும் சிக்ஸர் என 15 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஐதராபாத் தரப்பில் முகமது சிராஜ் 2, புவனேஸ்வர் குமார், சித்தார்த் கெளல் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.