சிந்துவுக்கும், சாய்னா நேவாலுக்கும் சரிவு; எல்லாத்துக்கும் காரணம் ஆசிய பாட்மிண்டன் போட்டிதான்…

 
Published : May 05, 2017, 12:17 PM ISTUpdated : Sep 19, 2018, 03:14 AM IST
சிந்துவுக்கும், சாய்னா நேவாலுக்கும் சரிவு; எல்லாத்துக்கும் காரணம் ஆசிய பாட்மிண்டன் போட்டிதான்…

சுருக்கம்

The collapse of PV Sindhu and Saina Nawal The reason for all is the Asian Badminton Competition ...

ஆசிய பாட்மிண்டன் போட்டியில் தோல்வியடைந்து வெளியேறியதால் சிந்துவுக்கும், நேவாலுக்கும் தரவரிசையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் இந்தியாவின் பி.வி.சிந்து ஓர் இடத்தை இழந்து நான்காவது இடத்தையும், அதேபோன்று சாய்னா நெவாலும் ஓர் இடத்தை இழந்து ஒன்பதாவது இடத்தையும் பெற்றுள்ளனர்.

ஆசிய பாட்மிண்டன் போட்டி கடந்த வாரம் நடைபெற்றது. இதில், சிந்து காலிறுதியோடும், சாய்னா முதல் சுற்றோடும் பரிதாபமாக வெளியேறினர். அதன் எதிரொலிதான் இந்த சரிவு.

ஆடவர் தரவரிசையைப் பொறுத்தவரையில் இந்தியாவின் அஜய் ஜெயராம் 13-ஆவது இடத்திலும், எச்.எஸ்.பிரணாய் ஓர் இடத்தை இழந்து 30-ஆவது இடத்திலும் உள்ளார்.

சாய் பிரணீத் ஓர் இடம் முன்னேறி 22-ஆவது இடத்திலும், ஸ்ரீகாந்த் 26-ஆவது இடத்திலும், சமீர் வர்மா 27-ஆவது இடத்திலும், செளரவ் வர்மா 39-ஆவது இடத்திலும் உள்ளனர்.

மகளிர் இரட்டையர் தரவரிசையில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா - சிக்கி ரெட்டி ஜோடி இரு இடங்கள் முன்னேறி 28-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

ஆடவர் இரட்டையர் தரவரிசையில் இந்தியாவின் மானு அத்ரி - சுமீத் ரெட்டி ஜோடி 25-ஆவது இடத்தில் உள்ளது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

2nd T20: இலங்கையை மீண்டும் ஊதித்தள்ளிய இந்தியா! ஷெபாலி வர்மா 'சரவெடி' அரைசதம்!
பெங்களூரு சின்னசாமியில் விராட் கோலி ஆட்டம்.. ஆனால் ரசிகர்கள் பார்க்க முடியாது.. ஏன் தெரியுமா?