
ஜிம்சியோன் ஏடிபி சேலஞ்சர் போட்டியில் இந்தியாவின் ராம்குமார் வெற்றிப் பெற்று அடுத்த சுற்றுக்கும், யூகி பாம்ப்ரி தோல்வி பெற்று போட்டியில் இருந்து விலகினார்.
ஜிம்சியோன் ஏடிபி சேலஞ்சர் போட்டி தென் கொரியாவின் ஜிம்சியோன் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் ராம்குமாரும், வைல்கார்டு வீரரனா அமெரிக்காவின் ரியான் ஷேனும் மோதினர்.
இந்தப் போட்டியில் ராம்குமார் தனது 6-4, 7-5 என்ற நேர் செட்களில் ரியான் ஷேனை வீழ்த்தியதன்மூலம் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
அதேசமயத்த்ஹில் மற்றொரு இந்தியரான யூகி பாம்ப்ரி, ரஷியாவின் கிராவ்சுக்கிடன் மோதினார்.
இதில், யூகி பாம்ப்ரி 2-6, 6-1, 3-6 என்ற செட் கணக்கில் கிராவ்சுக்கிடம் தோல்வி அடைந்து போட்டியிலிருந்து வெளியேறினார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.