
மாநில அளவிலான 19 வயதுக்குள்பட்டோருக்கான செஸ் போட்டியில் மகளிர் பிரிவில் கோவையைச் சேர்ந்த பிரியங்காவும், ஆடவர் பிரிவில் சென்னையை சேர்ந்த ஜெயக்குமாரும் வாகைச் சூடினர்.
மாநில அளவிலான 19 வயதுக்குள்பட்டோருக்கான செஸ் போட்டி மாவட்ட செஸ் சங்கம் சார்பில் நாகப்பட்டினத்தில் நடைபெற்றது.
கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய இதில் 19 மாவட்டங்களைச் சேர்ந்த 82 வீரர்கள், 40 வீராங்கனைகள் என 122 பேர் கலந்து கொண்டனர்.
ஐந்து நாள்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாள்தோறும் இரண்டு சுற்றுகள், கடைசி நாளில் ஒரு சுற்று என மொத்தம் ஒன்பது சுற்றுகள் நடைபெற்றன.
ஒன்பதாவது சுற்றின் இறுதியில் மகளிர் பிரிவில் கோவையைச் சேர்ந்த பிரியங்கா வாகைச் சூடினார்.
இரண்டாம் இடத்தை சென்னையை சேர்ந்த இலட்சுமியும், மூன்றாம் இடத்தை காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வர்ஷாவும், நான்காம் இடத்தை திருவள்ளூரைச் சேர்ந்த ஹரிவர்தினியும் பிடித்தனர்.
அதேபோன்று. ஆடவர் பிரிவில் சென்னை ஜெயக்குமார் முதலிடத்தையும், திருவாரூர் பரத் கல்யாண் இரண்டாமிடத்தையும், சென்னை பாரத் சுப்ரமணியன் மூன்றாமிடத்தையும், நாகை கமலநாதன் நான்காமிடத்தையும் பிடித்தனர்.
இவர்கள் செப்டம்பரில் பிகாரில் நடைபெற இருக்கும் தேசிய அளவிலான செஸ் போட்டியில் தமிழகத்தின் சார்பில் கலந்து கொள்கிறார்கள்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.