அமெரிக்க அதிபரின் தடை அறிவிப்பு, விளையாட்டு வீரர்களுக்கு பொருந்தாது - யுஎஸ்ஒசி

Asianet News Tamil  
Published : Feb 01, 2017, 12:40 PM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
அமெரிக்க அதிபரின் தடை அறிவிப்பு, விளையாட்டு வீரர்களுக்கு பொருந்தாது - யுஎஸ்ஒசி

சுருக்கம்

அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வரும் வெளிநாட்டு வீரர்களுக்கு, அமெரிக்க அதிபர் அறிவித்த தடைப் பொருந்தாது என்று அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டி (யுஎஸ்ஒசி) தெரிவித்துள்ளது.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஈரான், இராக், ஏமன், சிரியா, சூடான், லிபியா, சோமாலியா ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடை விதித்தர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். கடந்த

இந்த நிலையில், அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், "சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக அமெரிக்கா வரும் வெளிநாட்டு விளையாட்டு வீரர்களுக்கு இந்தத் தடை பொருந்தாது என்று அமெரிக்க அரசு யுஎஸ்ஒசியிடம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, அவ்வாறு விளையாட்டுப் போட்டிக்காக வருகை தருவோரை அமெரிக்காவில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்துள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 10-ஆம் தேதி உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டிகள் அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற உள்ளது.

அதைத் தொடர்ந்து பல்வேறு விளையாட்டுகளுக்கான உலகக் கோப்பை போட்டிகளும் அங்கு நடைபெற உள்ளன.

இதனிடையே, ஈரானில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலகக் கோப்பை மல்யுத்தப் போட்டியில் அமெரிக்க அணி பங்கேற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

yuzvendra chahal: விமானத்தில் சாஹல் செய்த விபரீதம்: சிக்கிய வீடியோ... முடிவுக்கு வரும் கிரிக்கெட் வாழ்க்கை?
IPL பைனல் பெங்களூருவில் நடக்காது.... பிளே ஆஃப் அட்டவணையில் பிசிசிஐ வைத்த ட்விஸ்ட்