
கிறைஸ்ட்சர்ச்,
நியூசிலாந்து - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அபார வெற்றிப் பெற்றது.
நியூசிலாந்து - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச் நகரில் கடந்த 17-ஆம் தேதி தொடங்கியது.
முதல் இன்னிங்சில் முறையே பாகிஸ்தான் 133 ஓட்டங்களும், நியூசிலாந்து 200 ஓட்டங்களும் எடுத்தன.
67 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி 3-வது நாள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 129 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
இந்த நிலையில் 4-வது நாளான ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து பேட் செய்த பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் 171 ஓட்டங்களில் ஆல்-அவுட் ஆனது.
இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 105 ஓட்டங்கள் இலக்கை நியூசியூசிலாந்து அணி 31.3 ஓவர்களில் எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கேப்டன் கனே வில்லியம்சன் 61 ஓட்டங்களும் (77 பந்து), அறிமுக வீரர் ஜீத் ராவல் 31 ஓட்டங்களும் எடுத்தனர்.
2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 25-ஆம் தேதி ஹாமில்டனில் தொடங்குகிறது.
பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல்-ஹக்கின் மாமனார் உடல்நலக்குறைவால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் உடனடியாக தாயகம் திரும்புகிறார்.
இதனால் 2-வது டெஸ்டில் மிஸ்பா ஆடுவது சந்தேகம் தான்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.