இந்தியா அடிச்சது சாதாரண ஸ்கோர் அல்ல.. சாதனை ஸ்கோர்!!

By karthikeyan VFirst Published Aug 19, 2018, 2:01 PM IST
Highlights

இந்தியா இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்கள் எடுத்துள்ளது. இது ஆசியாவிற்கு வெளியே டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்திய அணி எடுத்துள்ள மூன்றாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

இந்தியா இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்கள் எடுத்துள்ளது. இது ஆசியாவிற்கு வெளியே டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்திய அணி எடுத்துள்ள நல்ல ஸ்கோர்களில் ஒன்றாகும். 

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய அணி, மூன்று மாற்றங்களுடன் இந்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்ததால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் தவான் - ராகுல் சிறப்பாக தொடங்கினர். இருவரும் நிதானமாக ஆடியதோடு ரன்களும் சேர்த்தனர். 

எனினும் தவான் 35 ரன்களிலும் ராகுல் 23 ரன்களிலும் புஜாரா 14 ரன்களிலும் ஆட்டமிழக்க, இந்திய அணி உணவு இடைவேளைக்கு முன்னதாக 82 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. இதையடுத்து கோலி-ரஹானே ஜோடி அபாரமாக ஆடி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தது. இருவரும் இணைந்து நான்காவது விக்கெட்டுக்கு 159 ரன்களை குவித்தனர். 81 ரஹானே அவுட்டானார். 3 ரன் வித்தியாசத்தில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட கோலி, 97 ரன்களில் அவுட்டானார். 

ஹர்திக் பாண்டியா 18 ரன்களில் ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் 22 ரன்களில் களத்தில் இருந்தார். அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்களை குவித்தது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆசியாவிற்கு வெளியே நடந்த போட்டிகளில் முதல் நாளில் இந்திய அணி அடித்த மூன்றாவது அதிகபட்ச ஸ்கோர் இதுதான். இதற்கு முன்னதாக 2009ம் ஆண்டு நியூசிலாந்தில் அந்நாட்டுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் குவித்த 375 ரன்கள் தான் ஆசியாவிற்கு வெளியே இந்திய அணி முதல் நாளில் குவித்த அதிகபட்ச ஸ்கோர். 2001ல் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் குவித்த 372 ரன்கள் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர். அதன்பிறகு நேற்று அடித்த 307 ரன்கள், முதல் நாளில் இந்திய அணி குவித்த மூன்றாவது அதிகமான ஸ்கோர் ஆகும். 

அதேபோல், இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டியில் முதல் நாளில் குவிக்கப்பட்ட மூன்றாவது அதிகபட்ச ஸ்கோர் இதுதான். இதற்கு முன்னதாக 1990ம் ஆண்டு ஓவல் மைதானத்தில் நடந்த போட்டியில் முதல் நாளில் இந்திய அணி 324 ரன்களையும் 2007ல் அதே ஓவல் மைதானத்தில் நடந்த டெஸ்டின் முதல் நாளில் 316 ரன்களையும் இந்திய அணி குவித்தது. 

எனவே டிரெண்ட்பிரிட்ஜில்  இந்திய அணி முதல் நாளில் குவித்த 307 ரன்கள் என்பது ஆசியாவிற்கு வெளியே இந்திய அணி குவித்த சாதனை ஸ்கோர்களில் ஒன்று.
 

click me!