பெரிய பெரிய ஜாம்பவான்கள் கூட செய்யாத சம்பவம்!! அறிமுக போட்டியிலேயே ரிஷப் பண்ட் சாதனை

By karthikeyan VFirst Published Aug 19, 2018, 12:03 PM IST
Highlights

அறிமுக டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய இளம் வீரர் ரிஷப் பண்ட், இரண்டாவது பந்திலேயே சிக்ஸர் அடித்து தனது ரன் கணக்கதை தொடங்கினார். 

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோற்ற இந்திய அணி, மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்கியது. 

இந்த போட்டிக்கான இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. முரளி விஜய்க்கு பதிலாக தவானும், குல்தீப் யாதவிற்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் பும்ராவும் சேர்க்கப்பட்டனர். மேலும் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திற்கு பதிலாக இளம் வீரர் ரிஷப் பண்ட், அணியில் சேர்க்கப்பட்டார். இதுதான் ரிஷப் பண்ட்டிற்கு அறிமுக டெஸ்ட் போட்டி.

டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்ததால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் தவான் - ராகுல் சிறப்பாக தொடங்கினர். இருவரும் நிதானமாக ஆடியதோடு ரன்களும் சேர்த்தனர். 

எனினும் தவான் 35 ரன்களிலும் ராகுல் 23 ரன்களிலும் புஜாரா 14 ரன்களிலும் ஆட்டமிழக்க, இந்திய அணி உணவு இடைவேளைக்கு முன்னதாக 82 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. இதையடுத்து கோலி-ரஹானே ஜோடி அபாரமாக ஆடி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தது. இருவரும் இணைந்து நான்காவது விக்கெட்டுக்கு 159 ரன்களை குவித்தனர். 81 ரஹானே அவுட்டானார். 3 ரன் வித்தியாசத்தில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட கோலி, 97 ரன்களில் அவுட்டானார். 

அதன்பிறகு ஹர்திக் பாண்டியாவுடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். அறிமுக போட்டியில் களமிறங்கிய ரிஷப் பண்ட், சற்றும் பதற்றமோ பயமோ இல்லாமல், தான் எதிர்கொண்ட இரண்டாவது பந்திலேயே சிக்ஸர் விளாசி ரன் கணக்கை துவங்கினார். டெஸ்ட் போட்டியில் சிக்ஸருடன் ரன் கணக்கத்தை தொடங்கிய 12வது வீரர் ரிஷப் பண்ட் ஆவார். டெஸ்ட் போட்டியில் சிக்ஸருடன் ரன் கணக்கத்தை துவங்கிய முதல் இந்திய வீரர் ரிஷப் பண்ட் தான். 

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்கள் எடுத்திருந்தது. ஹர்திக் பாண்டியா 18 ரன்களில் அவுட்டாக, ரிஷப் பண்ட் 22 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

click me!