இந்திய அணியின் மானம் காத்த கோலி-ரஹானே!! இங்கிலாந்து கண்ணில் மண்ணை தூவி ரன்கள் குவிப்பு

By karthikeyan VFirst Published Aug 19, 2018, 9:58 AM IST
Highlights

இந்தியா இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கோலி-ரஹானே ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி சரிவிலிருந்து மீண்டு ரன்களை குவித்தது. 
 

இந்தியா இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கோலி-ரஹானே ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி சரிவிலிருந்து மீண்டு ரன்களை குவித்தது. 

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோற்ற இந்திய அணி, மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்ததால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் தவான் - ராகுல் சிறப்பாக தொடங்கினர். இருவரும் நிதானமாக ஆடியதோடு ரன்களும் சேர்த்தனர். 

எனினும் இந்திய அணி 60 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 35 ரன்களுக்கு தவான் அவுட்டானார். அதைத்தொடர்ந்து ராகுலும் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து புஜாராவுடன் கோலி இணைந்தார். நன்றாக ஆடிவந்த புஜாரா, பவுன்சர் பந்தை தூக்கி அடித்து தேவையில்லாமல் விக்கெட்டை இழந்தார். புஜாரா 14 ரன்களில் வெளியேற, இந்திய அணி 82 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. 

இதையடுத்து கோலி-ரஹானே ஜோடி, சிறப்பாக ஆடி ரன்களை குவித்தது. ரஹானே தனது தவறுகளை திருத்திக்கொண்டு பந்துகளை திறம்பட எதிர்கொண்டு, நல்ல ஷாட்களை ஆடினார். இருவருமே சிறப்பாக ஆடி, அரைசதம் கடந்தனர். கோலியும் ரஹானேவும் சதத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர். எனினும் ரஹானே 81 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 159 ரன்களை சேர்த்தது. அதன்பிறகும் சிறப்பாக ஆடிய கோலி, 97 ரன்களில் அடில் ரஷீத்தின் பவுலிங்கில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

ஹர்திக் பாண்டியா 18 ரன்களில் ஆட்டமிழக்க, ரிஷப் பண்ட் 22 ரன்களுடன் களத்தில் இருக்க, முதல் நாள் ஆட்டம் முடிந்தது. இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்கள் எடுத்துள்ளது. 
 

click me!